பொன்னியின் செல்வன் – மியுசிக் அகாடமியில் ஜூன் 8 முதல் 14 வரை மாலை 6 மணிக்கு

மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு.. விரைவில்.

முன் பதிவுக்கு – http://www.eventjini.com/ponniyinselvan
ponniyinselvan_banner_banner

பொன்னியின் செல்வன் – கோடையில்… மேடையில்…கோடையில்… மேடையில்… வலம் வரவிருக்கிறான் ‘பொன்னியின் செல்வன்’! கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் கதாநாயகன் வந்தியத்தேவனாக நடிக்க எம்.ஜி.ஆர். பெரும் விருப்பம் கொண்டிருந்தார். கமல் ஹாசனுக்கும் அதே ஆசை. இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். ஆனால், இவர்களுக்கே கைவராத இந்த சாகசத்தை நிகழ்த்திக்காட்ட பெரும் ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம்! தமிழர்களின் வீர வரலாற்றுக்கும், தமிழின் நாவல் கலாசாரத்துக்கும் சாட்சியாக நிற்கும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை மேடை நாடகமாக, ஜூன் மாதம் சென்னையில் அரங்கேற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தடதடத்துக்கொண்டிருக்கும் எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணனிடம் பேசினேன்… ”சென்னை வானொலியில் ‘ஆனந்தமான 60 நிமிடங்கள்’ நிகழ்ச்சித் தயாரிப்பில் ஆரம்பிச்ச எங்கள் பயணம், வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில். . .