• அனுபவப் பகிர்வு: வெளி உணவு...
    இன்று காலை அலுவலக வேலையாக சென்று வரும் பொழுது நம் சென்னையின் பிரபல உணவகம்
    ஒன்றில் சிற்றுண்டி சாபிடுவதர்காக நுழைந்தேன். ஒரு plate இட்லி என ஆர்டர்
    கொடுத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்துக்குகொண்டிருந்த பொது நான் கண்ட ஒரு
    காட்சி இந்த பகிர்வை எழுத வைத்தது.

    பால் மனம் மாறாத ஒரு குழந்தைக்கு அந்த இளம் பெற்றோர் ஹோட்டல் உணவை வாங்கி ஊட்டிக்
    கொண்டிருந்தனர். என் பள்ளி நாட்களின் போது கூட என் அம்மாவோடு நான் வெளியே
    செல்கையில் ஒரு பிரூட்டி குடிபதற்காக கெஞ்சி வாங்கிக்குடிபேன். என் வயிற்ரை
    கெடுக்காது இருக்க என் அம்மா முடியாத போதும் தானே சமைப்பாளே தவிர வெளியில் இருந்து
    வாங்குவதை தவிர்த்து விடுவாள். என் அப்பா அவப்போது கல்யாணி கொறிக்க ஏதாவது இருக்கா
    என்பார். அதற்காகவே ஏதாவது செய்து வைத்திருப்பாள். என் பெற்றோர் மட்டும் அல்ல.
    நம்மில் பலருடைய அம்மாக்களும் இப்படிதான் இருந்திருப்பர், ஆயினும் அவசர கதியாய்
    மாறிப்போன இந்நாளில் நம் தலைமுறை பெற்றோரிடம் இது போன்ற பழக்கங்கள் இல்லையோ என்றே
    தோன்றுகிறது. தினப்படி சமையல் செய்வதில் கூட பலருக்கு முடியாமல் போகிறது. தன்
    இல்லத்தில் சமையல் செய்யும் பழக்கம் என்பது தமிழை போல தேய்ந்து வருகிறது. இதை நாம்
    சொன்னால் உடனே நீயா சமைகின்றாய் என கேள்வி மாறிப்போகிறது. ஒரு உணவுசாலையில் இப்படி
    ஒரு விளம்பரம் பார்த்தேன். வீட்டில் சமைக்க முடியலையா இங்கே வாங்க என்று. அடிப்படை
    சமையலே கடினமான இக்காலத்தில் வார இறுதி என்பது hotel சென்று மொய் வைக்க
    வேன்டியாயிற்று. கணவன் மனைவி ஆகியோர் இருவருமே வீடு வேலையை பகிர்ந்து கொண்டாலன்றி
    வீட்டு சமையல் சாத்தியம் இல்லை.
    இந்த சமகால கூட்டத்தில் இருந்து நான் மாறுபட்டவன் இல்லை. திருவல்லிக்கேணி
    மேன்சனில் இருந்ததாலோ என்னவோ வெளியில் சென்று உணவு உட்கொள்வது என்பது எனக்கு
    பழக்கமாகி இருந்தது. இருக்கிறது. என் மனைவிக்கு வீட்டில் செய்வதே பிடித்திருகிறது.
    நானும் இதை தானே செய்கின்றேன். ஹோட்டல் காரர்களுக்கு பணம் செலவழிக்கவிட்டால்
    உங்கள்ளுக்கு தூக்கம் வராதே என்று என்னை சினந்தும் கொள்வாள். எதிர் கட்சியினரின்
    ஞாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆளும் கட்சி போல் மௌனம் சாதித்து விடுவேன்.
    திருவல்லிகேணியில் இருந்தவரை சாம்பார் இட்லிக்கு நல்ல பெயர் எடுத்த அந்த ஹோட்டல்
    தான் என் சாய்ஸ். காபி சாப்பிடவும் நான் போகும் இடம். ஒரு நாள் சாம்பார் இட்லி
    சொல்லிவிட்டு காத்திருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி. வந்த சாம்பாரில் ஒரு பெரிய ஈ.
    ஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் என கண்ணன் பிரளய
    காலத்தில் அல இலையில் பயணித்ததை போல் இந்த ஈ. இது எப்படி வந்ததென்றும் எனக்கு
    தெரியாது. வழக்கமாக சாப்பிடும் இடமாகையால் சத்தம் போடாது சர்வரை அழைத்து
    காட்டினேன். ஒரு பதட்டமும் இல்லாது அதை எடுத்துவிட்டு வேற ஏதாவது கொண்டு வரவா
    என்றார்? நான் வேண்டாம் என சொல்லி புறப்பட்டேன்.
    ஒரு முறை கோடம்பாக்கம் ஹை ரோடில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு சில நண்பர்கள்
    சென்றிருந்தோம். பைசா கட்டி விட்டு உணவிற்காக காத்துக்கொண்டு இருந்ததில் நேரம்
    நிறைய சென்றுவிட்டது. என் நண்பர் பசியினாலோ அல்லது எதனாலோ தூண்டப்பட கோவத்தோடு
    கத்தத்துவன்கினார். ஏன்யா காசு வாங்கிட்டு தானே சோறு போடுறீங்க சும்மாவா போடுறீங்க
    என்று. மேனேஜர் வந்து மன்னிப்பு கேட்டதோடு போகையில் இலவசமாக ஐஸ் கிரீம்
    கொடுத்தார், மேற் கூறிய சம்பவங்கள் ஒன்றை கற்றுக்கொடுத்தது. சத்தம் போட்டால்
    இலவசம் கிடைக்கும் பொறுத்துக்கொண்டால் வைராகியமும் பசியும் தான் மிஞ்சும்.

    நான் இன்றும் வெளியே சாபிடுவதானால் ஒரு செயின் ஆப் ரெஸ்டாரென்ட் தேர்ந்தெடுபேன்.
    சுத்ததிற்கோ அல்லது சுவைக்கோ பெரிய குறை இருக்காது எனினும் இழப்பு பணமளவில்
    பெரியதாய் இருக்கும். செட்டியார் சமுதாயத்தை சேர்ந்த என் நண்பன் ஒருமுறை சொன்னான்.
    அவர்கள் சமுதாயத்தில் வருடாவருடம் எல்லா உறவினர்களும் பரம்பரை வீட்டில் கூடி
    தேவையான வத்தல் ஊறுகாய் போன்றவை செய்து பகிர்ந்து எடுத்து செல்வார்கள் என்று. இது
    எல்லா சமுதாயத்திலும் நிலவிய வழக்கமாக இருக்க்கலாம். என் பாட்டி வீட்டிலும் கூட
    நான் ஊறுகாய் ஜாடிகளை பார்த்திருகின்றேன். இன்றோ காலை சிற்றுண்டி , சப்பாத்தி ,
    சோற்றில் கலக்கும் கலவைகள், என எல்லாமே பாக்செயயப்பட்டு விற்பனை ஆகின்றது.இது உடல்
    நலத்திற்கு நல்லதும் இல்லை. நண்பர்களே கூடுமான வரை நாம் வெளி உணவை தவிர்ப்போம்.
    அது நம் உடலுக்கும் பணத்திற்கும் நல்லது. ஒன்று கூடி பண்டைய வாழ்வை வாழ்வோமே!


    Nandri

    Thanjai Dileep Vijayaraghavan

    http://poojiyam.in/katturai.html

    [email protected]
  • ஊம். அது அந்தக் காலம். சிவா

    அன்புள்ள

    மலர்ச் சோலை மங்கை டாக்டர் எல். கைலாசம்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters