dear allதிருவிடைமருதூர் பெரிய தேர் வெள்ளோட்டம் தேவார மூவராலும் , மாணிக்க வசகர் மற்றும் பட்டினத்தார் ஆகியோரால் பாடல் பெறற ஸ்தலம் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில். இங்கு 80 ஆண்டுகளுக்கு பிறகு கட்டப்பெற்ற மிகப் பெரிய தேர் வெள்ளோட்டம் நடைப்பெற்றது, திருவாருர் தியாகராஜர் , கும்பகோணம் சாரங்கராஜா தேர் போன்று இதுவும் பெரிய தேர் திருவாருர் தேர் அழகு, கும்பகோணம் கோயில் அழகு, மன்னார்குடி மதில் அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு , திருவிடைமருதூர் தெரு அழகு என்ற பழமொழிக்கு ஏற்ப , அழகிய வீதிகளில் வெள்ளோட்டம் ந்டைபெற்றது. வெள்ளோட்டம் என்பது ஒரு தேர் புதியதாக அமைக்கப் பட்டவுடன் திருக்கோயிலின் 4 வீதிகளிலும் தேருடைய அடிபாகத்தை மட்டும் வைத்து அதனை வடிவமைத்த சிற்பிக்ளுக்கு மரியாதை செய்யும் விதமாகவும். புதிய தேர் 4 வீதிகளிலும் ஓடுவதை சரி பார்பபதற்காகவும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இநத தேரின் எடை சுமார் 120 டன், அகலம் சுமார் 25 அடி, உயரம் சுமார் 100 அடி. மிக அழகான சிற்பங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன. இதனுடைய வீடீயோ காட்சியை இணையதளத்தில் கண்டுமகிழுங்கள். http://www.heritagetown.org/video/video.html
THIRUVIDAIMARUTHUR ( NEAR KUMBAKONAM ) NEW CAR FESTIVAL ( VELLOTTAM) The New Car Festival ( VElLLOTTAM) was celebrated in the Thiruvidaimaruthru Magalinga Swamigal Temple This tempe is very ancient. The car (Thiruther) is very big like Tiruvarur and Kumbakonam temples Car (Thiruther) compare with other temples. Visit and watch the video about this rare and unique festival in the following linkhttp://www.heritagetown.org/video/video.html