ENDHIRAN a strange review
  • எந்திரன் .. கடந்த இரண்டு வருடங்களாக ஒட்டு மொத்த திரையுலகையும் எதிர்பார்க்க வைத்த படம் .. ரஜினி அவர்கள் ஒருமுறை சொன்னார் இது ஒரு அனுபவம் என்று .. ஆமாம் இது ஒரு அனுபவம்தான் அவருக்கு மட்டும் அல்ல டைரக்டர் ஷங்கருக்கும் இது ஒரு அனுபவமே .. அனால் ரசிகர்களுக்கோ இது மிகப்பெரிய ஏமாற்றம் .. பத்து இருபது வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்ட ஹாலிவுட் படங்களின் காட்சிகளை
    இப்போது பற்பதினால் மட்டும் அல்ல இதைப்போய் ஹாலிவுட் படங்களை மிஞ்சி விட்ட காட்சிகள் என்று வாய் கூசாமல் திரும்பத்திரும்பஅலறிக்கொண்டிருப்பதைத்தான் தாங்கவே முடியவில்லை.

    எல்லோரும் உயிரைக்கொடுத்து உழைத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை .. என்னுடைய கோபமெல்லாம் இவ்வளவு உழைப்பையும் பணத்தையும் செலவு செய்ய ஒரு சொந்த கதையை உருவாக்க முடியவில்லையா ஷங்கரால் ?
    Bicentennial Man (1999) ,
    Terminator 2: Judgment Day (1991) ,
    I, Robot (2004)
    போன்ற படங்களிலிருந்து கதையை மட்டும் அல்ல காட்சிகளையும் சுட்டிருப்பது தமிழனுக்கு அழகு சேர்க்கவில்லை மாறாக மேலை நாட்டவர் நகைக்கவே வழி வகுத்திருகிறது ..
    மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் எல்லாம் ரோபோவை மையப்படுத்திய படங்கலேன்றலும் ஒன்றுகொன்று மாறுபட்டவை .. ஒன்றின் நகல் மற்றொன்று என்று எவராலும் நினைக்க முடியாது.
    அனால் எந்திரன் ?

    கதையை விட்டுவிட்டு பார்த்தால் அனைவரின் உழைப்பு தெரிகிறது .. விசுவல் எபக்ட்ஸ் மட்டும் சில இடங்களில் பல்லை இளிப்பது, கடைசி நேரத்தில் வந்தது வரை போதும் என்று அவசரப்பட்டது தெரிகிறது.

    சுஜாதா அவர்களின் இழப்பு ஷங்கரை ஒரு கை இழந்தவராக பாதித்திருப்பது கண்கூடு.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க போகும் மிகச்சாதாரண மனிதர்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பரவசமடைவார்கள்.. அனால், தொலைக்காட்சி வழியாக மேலைநாட்டு படங்களை தமிழிலேய பார்த்து ரசித்து பழகிவிட்டவர்கள் காட்சிக்கு காட்சி எள்ளி நகைப்பார்கள் .. அதையும் காட்சிக்கு காட்சி மக்கள் ஆரவாரம் என்று தொலைகாட்சியில் வெட்கமே இல்லாமல் விளம்பரப்படுத்துவர்கள் ..

    இத்தனைப்பெரிய மனிதர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நகைப்பிற்க்குரியதாகி விட்டதுதான் மிகப்பெரிய சோகம்.

    ஆம் ரஜினி சொன்னது போல் இது ஒரு அனுபவம்தான்.. இப்படத்திற்காக இராப்பகலாக உழைத்த அவருக்கும், மற்றவர்களுக்கும்.

    ஷங்கருக்கு இது ஒரு பாடம்.. உலகத்தரத்தை இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டும்தான் இவரால் எட்ட முடியவில்லை. 1. கதையிலும் காட்சிகளிலும் சுயம் இல்லாதது 2. விசுவல் எபக்ட்ஸ்.

    ரஜினி மற்றும் இப்படத்தில் வேலை பார்த்த அணைத்து பெரிய மனிதர்களுக்கும், குழுவினருக்கும் அவர்களின் உன்னதமான உழைப்பிற்காக வாழ்த்துக்கள்..

    நான் பிறந்தது முதல் ரஜினிக்கு இரசிகன், ஜென்டில்மேனில் இருந்து ஷங்கருக்கு இரசிகன்..

    அனாலும், பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ஷங்கர் சார் .. !
  • Very true one about Endhiran movie…
  • Hi all,

    I do not agree with this review. The writer clearly had not read Mr.
    Sujatha's works. En Iniya Endhira and Meendum Jeano written in the 80s form
    the base for the movie Enthiran. He sees a copy of English movies due to a
    couple of scenes and the Humanoid Robot idea. I recommend the writer to read
    the two books of Sujatha i mentioned before and transfer the concept of a
    dog robot to human. Even the endings of the book and movie are
    similar(showcasing of the robot in museum). I agree with one and only point.
    Shankar really misses Sujatha. And for the rest of the review, I totally
    disagree. There are budget constraints as pointed out and this whole review,
    with all due respect, is one flawed argument.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters