*நூல் அறிமுகம்: * ’அதிகம் பயணிக்காத பாதை’ - *ப்ரதீப் சக்ரவர்த்தி* *பக்-244 விலை ரூ.210/- பழநியப்பா பிரதர்ஸ், சென்னை-14 044-2813 2863 * சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, ஆகிய நகரங்களின் சுருக்கமான வரலாறும் அந்நகரங்களைச் சுற்றி அமைந்துள்ள சில கோயில்களைப் பற்றியும் சுவையாக எழுதப்பட்ட தொகுப்பு நூல் இது.
சைவத் தலம், வைணவத் தலம், பாடல் பெற்றவை, மங்களாசாசனம் பெற்றவை என்று எந்த பாகுபாடுமின்றி தான் தேர்ந்தெடுத்த கோயில்களுக்கு நேரில் சென்று அந்த அனுபவங்களை அப்படியே எழுதியிருக்கிறார்.
இடையிடையே உபநிஷத்துகள், தேவாரம், திருவாய்மொழி, பெரும்பாணாற்றுப்படை என்று பல நூல்களிலிருந்தும் ஆசிரியர் எடுத்துக்காட்டும் மேற்கோள்கள் நூலை மேலும் கனமாக்குகிறது.
வேப்பத்தூர் (கும்பகோணம்) அமர்ந்த பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணியில் செங்கற்களையும் சுன்ணாம்புக் கலவையையும் இணைக்கும் சகடம் தேய்த்தல் என்கிற நுட்பமான முறை அந்தக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பது, மன்னார் கோயில் (திருநெல்வேலி) கோயிலுக்கு ஒரு விதவைப் பெண்ணின் மூலம் கிடைத்த நிலத்தை அவளுடைய ஆண் உறவினர்கள் ஒத்துக்கொண்ட பின்புதான் கோயில் ஏற்றுக்கொண்டது என்று கல்வெட்டு மூலம் தெரிய வருவது போன்ற பல அரிய வியப்பூட்டும் தகவல்கள் உள்ளன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பல கோயில்கள் அதிகம் புகழ் பெறாதவை. அவற்றின் புகைப்படங்களையும் இணைத்திருக்கலாம்.
(நூல் அரங்கம்-தினமணி 26மார்ச்2012)
*பின்குறிப்பு*: இந்நூல் இதே பதிப்பகத்தாரால் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ....’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும், ....அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் ....விளங்கு கண் எண்ணினன்’ என, வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும் ....விகடம் ஏன் செய்தாய்?’ என, ’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ என்ன, ....மயிலவன் நகைத்து நிற்க, மலை அரையன் உதவ வரும் உமையவளை நோக்கி, ‘நின் ....மைந்தரைப் பாராய்!’ எனக் கருது அரிய கடல் ஆடை உலகு பல அண்டம் ....கருப்பமாய்ப் பெற்ற கன்னி கணபதியை அருகு அழைத்து அக மகிழ்வு கொண்டனள் ....களிப்புடன் உமைக் காக்கவே! நூல்: தனிப்பாடல் பாடியவர்: சிவப்பிரகாச சுவாமிகள்
அறிமுகம் குழந்தைகள் இருக்கும் வீட்டில், கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால் அதேசமயம், ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகளாக இருந்துவிட்டால் அவற்றின் கலாட்டாக்கள் அடிக்கடி எல்லை மீறிவிடும். ஒன்றை ஒன்று கேலி செய்யும், முடியைப் பிடித்து இழுக்கும், சட்டையை அவிழ்த்துவிடும், காலை வாரும், சண்டை போட்டுக்கொண்டு முட்டி மோதும், ’அம்மா, இவனைப் பாரேன்’ என்று தேம்பிக்கொண்டே ஓடி வரும். அழுகிற குழந்தையை அணைத்துச் சமாதானப்படுத்துவார் தாய். ‘உன்னை யார் அடிச்சாங்க? நான் அவனைக் கண்டிக்கறேன்’ என்று ஆறுதல் சொல்வார். இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான். ஐந்து நிமிடம் கழித்து இதே குழந்தைகள் பழைய சண்டைகளை மறந்து ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். அப்புறம் மறுபடி சண்டை, மறுபடி சமாதானம், மறுபடி விளையாட்டு ... நம் வீடுகளில் தினந்தோறும் நடக்கிற இந்த நாடகம், பெரிய கடவுள்கள் வீட்டிலும் உண்டா? அதைக் கற்பனை செய்து ஒரு சுவாரஸ்யமான பாடலாக எழுதியிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ‘நன்னெறி’ என்ற புகழ் பெற்ற காவியத்தைப் படைத்தவர். உரை அரன், அதாவது சிவபெருமானிடம் ஐங்கரன், அதாவது விநாயகன் வந்து நிற்கிறான். தன் தம்பி ஆறுமுகன், அதாவது முருகனைப் பற்றிக் கோள் சொல்லிச் சிணுங்குகிறான். ’அப்பா, இந்த முருகனைப் பாருங்களேன், வேணும்ன்னே என் காதைப் பிடிச்சுக் கிள்ளறான்.’ ‘அப்படியா? கொஞ்சம் பொறு, விசாரிக்கலாம்’ என்கிறார் சிவன். ‘முருகா, அண்ணனைக் கிள்ளினியா?’ இந்தக் கேள்விக்கு எந்தக் குழந்தையும் நேரடியாகப் பதில் சொல்லாது. தன்மீது குற்றம் சாட்டுகிற அண்ணன்மேல் ஒரு புகாரை ஏவுகிறான் முருகன், ‘அவன் என்ன செஞ்சான் தெரியுமா? என்னோட ஆறு முகத்துல எத்தனை கண் இருக்குன்னு எண்ணிப் பார்த்தான்.’ ‘நீ அப்படிச் செஞ்சியா விநாயகா?’ இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. சட்டென்று அடுத்த புகார் பாய்ந்து வருகிறது. ’முருகன் என்னோட தும்பிக்கையோட நீளத்தை முழம் போட்டு அளந்தான்.’ இதற்குமேல் என்ன செய்வது என்று சிவபெருமானுக்கே புரியவில்லை. நமுட்டுச் சிரிப்போடு உட்கார்ந்துவிடுகிறார். ‘உங்க பிரச்னையை விசாரிச்சு நியாயம் சொல்றதுக்கு ஒரே ஒருத்தராலதான் முடியும்’ என்கிறார், உதவிக்குத் தன் மனைவி பார்வதியை அழைக்கிறார். ‘உன் பிள்ளைங்க பண்ற கூத்தைப் பாரேன்!’ மலை அரசனின் மகள், நம்மால் அளக்க இயலாத கடலையே ஆடையாக உடுத்தியவள், உலகம் முழுவதையும் படைத்த அன்னை, குழந்தைச் சண்டையை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று அவளுக்குதானே தெரியும்? ஆரம்பத்தில் புகார் சொன்ன விநாயகனை அழைக்கிறாள், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப்படுத்துகிறாள். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சிரிக்கிறார்கள். நமக்கு அருள் புரிகிறார்கள். துக்கடா
இன்று வைகாசி விசாகம், முருகனின் பிறந்த நாள், அதற்கென்று ஒரு கலகலப்பான ’பார்ட்டி’ சூழல் பாட்டு ;) இதன் நடுவே ஓர் இலக்கணப் பாடமும் உண்டு, சிவன் பார்வதியை நோக்கி ‘உன் மைந்தரைப் பார்’ என்கிறார், ‘உன் மைந்தர்களை’ என்று சொல்லவில்லை. ஏன்? ’மைந்தன்’ என்பது ஒருமை, ‘மைந்தர்’ என்பது பன்மை, ‘மைந்தர்கள்’ என்று சொல்லவேண்டிய அவசியமில்லை, நண்பர்கள், தலைவர்கள், மன்னர்கள் எல்லாமே இப்படிதான், கொஞ்சம் எக்ஸ்ட்ரா :) 333/365
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைபற்றி ஒரு பார்வை இன்று அவர் என் மனதில் அடிக்கடி வந்து போகிறார்
தேசிக விநாயகம் பிள்ளைஅவர்கள்நாகர்கோயிலையடுத்த தேரூரைச் சேர்ந்தவர். எளிமை,இனிமை, இசை நயம் மிக்கவை இவர் பாக்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் படித்து இன்புறும் வகையில் எளிய தமிழ்ச் சொற்களையே தம் பாடல்களில் கையாண்டவர். மலரும் மாலையும், தேவியின் கவிதைகள், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்பவற்றைப் பாடியுள்ளார். உமர்கய்யாம் பாரசீக மொழியில் பாடியதை தமிழில்உமர்கய்யாம் பாடல்கள்என மொழிபெயர்த்துள்ளார். இவரதுஆசிய ஜோதிஎன்பது எட்வின் அர்னால்டின்‘Light of Asia’வின் தமிழாக்கம். உள்ளத் துள்ளது கவிதை - >இன்ப உருவெடுப்பது கவிதை >தெள்ளத் தெளிந்த தமிழில் - >உண்மை தெரிந்துரைப்பது கவிதை எனக் கவிதை இலக்கணம் கூறும் இவர், ஆசிய ஜோதியில், பிறப்பினால் எவர்க்கும் - >உலகில் பெருமை வாராதப்பா! >சிறப்பு வேண்டுமெனில் - >நல்ல செய்கை வேண்டுமப்பா! என்கிறார். வெய்யிற் கேற்ற நிழலுண்டு - >வீசும் தென்றற் காற்றுண்டு, >கையிற் கம்பன் கவியுண்டு, >கலசம் நிறைய மதுவுண்டு, >தெய்வ கீதம் பலவுண்டு, >தெரிந்து பாட நீயுண்டு, >வையந் தருமிவ் வளமின்றி >வாழும் சொக்கம் வேறுண்டோ? என்ற பாடல் உமர்கய்யாமின்“Here with a loaf of bread”என்ற பாடலின் தமிழாக்கம். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்ஒரு நகைச்சுவைப் பெட்டகம். நாஞ்சில் நாட்டில் நிலவிய பெண் வழிச் சொத்து முறையை இந்நூலில் கவிமணி சாடுகிறார். மாமியார் தன் மருமகளுக்கு செய்யும் கொடுமையைப் பின்வருமாறு கூறுகிறார். அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்; >நல்ல மிளகை நறுக்கி வைப்பாள், >கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள், >உப்பில் புளியை உருட்டி வைப்பாள், >கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள் என்கிறார். தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே >துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி >அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் >அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி என்ற பாடல்மலரும் மாலையில் இடம் பெற்ற எளிமையான இனிய பாடல்.
********************************************************** உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ****************************************************************** இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தலம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தலமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது . இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடுதலமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதலமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo —might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
Could be ! Whatever we read and hear now about Far East reveals more and more of Tamil kings !
Both RRC and RC have successfully ruled these places and during the "royal exchange" the seeds might have been sown as one of the tools of peace-making ! As narrated in the movie Yezhaam Arivu that Bodhidharman [a prince from Tamil kingdom] travelled to China etc. Varman, Rajan, Dharman and all names relate only to Tamil kings and not to other kings of India. Even Ramayana and Hanuman are celebrated in this region. How ? What is the reason ? They might also feel that their routes are not there and elsewhere. See the list of kings - would you say they are not Tamils ?
veegopalji Khmer Empire(802-1431) Order King Personal Name Reign 27 Jayavarman II Jayavarman 802-850 28 Jayavarman III Jayavarthon 850-877 29 Indravarman I Indravarman 877-889 30 Yasovarman I Yasovarthon 889-900 31 Harshavarman I Harshavarman 900-925 32 Ishanavarman II Isanavarman 925-928 33 Jayavarman IV Jayavarman 928-941 34 Harshavarman II Harshavarman 941-944 35 Rajendravarman II Rajedravarman 944-968 36 Jayavarman V Jayavarman 968-1001 37 Udayadityavarman I Udayadityavarman 1002 38 Jayavirahvarman Jayavirahvarman 1002-1006 39 Suryavarman I Suryavarman 1006-1050 40 Udayadityavarman II Udayadityavarman 1050-1066 41 Harshavarman III Harshavarman 1066-1080 42 Noriditdravarman Noriditdravarman 1080-1113 43 Jayavarman VI Jayavarman 1080-1107 44 Dharanindravarman I Dharanindravarman 1107-1113 45 Suryavarman II Suryavarman 1113-1150 46 Dharanindravarman II Dharanindravarman 1150-1156 47 Yasovarman II Yasovarman 1156-1165 48 Tribhuvanidityavarman Tribhuvanidityavarman 1165-1177 ChamInvasion: 1177-1181 49 Jayavarman VII Jayavathon 1181-1218 50 Indravarman II Indravarman 1218-1243 Siamwas created in 1238 during reign of Indravarman by Pho KhunSi IntharathitinSukhothai, one of Khmer’s provinces. 51 Jayavarman VIII Jayavarman 1243-1295 52 Indravarman III Srei Indravarman 1295-1307 53 Srei Jayavarman Srei Jayavarman 1307-1327 54 Jayavarman IX Jayavama Borommesvarah 1327-1336 55 Trosok Peam Ponhea Chey 1336-1340 56 Nippean Bat Nippean Bat 1340-1346 57 Lompong Racha Lompong Racha 1346-1351 Siam Invasion: 1352-1357 58 Soryavong Soryavong 1357-1363 59 Borom Reachea I Borommarama 1363-1373 60 Thomma Saok Thomma Saok 1373-1393 Siam Invasion: 1393 (5 months). 61 Barom Reachea II Ponhea Yat 1393-1463 Kingdom of Cambodia (1431-1863) Name Personal Name Reign Ponhea Yat Ponhea Yat 1393-1463 Narayanareachea I Narayanareachea 1463-1469 Srei Reachea Srei Reachea 1469-1485 Srei Soryatei Soryatei 1475-1485 Thommareachea I Thommareachea 1485-1504 Dharmarajadhiraja Dharmarajadhiraja 1444-1512 Sri Sukonthor Sri Sukonthor 1486-1512
One might want to consider the fact that names of Indian origin found in Cambodia may not suggest that the Cambodian kings were of Indian origin. A related example for illustration - we have folks of Christian faith in India with names such as Joseph, and we know quite well that Joseph from Chidambaram is not of European origin. South East Asia was influenced by Buddhism (pre Christian era) and Hinduism (post Christian era). Buddhism preceded Hinduism as we know from archeological evidences and from Chinese visitors in early Christian era. I suspect the Hindu names came into use with the adoption and spread of Hinduism in Cambodia.
I wonder if we know for certain that the Pallavas were of Tamil origin (?)
Hinduism was born in India about 1500 - 2000 BCE, Buddhism was born about 400-500 BCE, so Hinduism is definitely older.Between 200 BCE and 100 AD Hindu kings from southern India colonisedsoutheast asia - from Burma to as far as Java and Sumatra. The Khmer empire in cambodia and theHindu dynasties in Thailand, Malayasia and Indenesia were descendants of these dynasties.
The most famous remain of these empires is the Angkor Wat temple in Cambodia. Buddhism reached these areas from 200 AD to 500 AD - almost half a millenia later, mostly through buddhist missionary monks.
[Source(s):
India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of Historyof Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India) p.231,252]
In other words, Buddhism came out of Hinduism much like Scientology came out of sheer stupidity !