சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி
  • சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி
    ஆசிரியர் குழு
    http://www.tamilhindu.com/wp-content/uploads/swami_lakhmananda_anjali.jpg
    24 Aug 2008 | அச்சிட
    ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு
    ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி, ஸ்ரீ
    கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்
    பட்டிருக்கிறார். வனவாசிகளின் நலனுக்காக பல கல்விசாலைகள், மருத்துவ சேவை மையங்கள்
    ஆகியவற்றை நிறுவியவர் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்கள்.
    வன்முறை தாக்குதல்கள் சுவாமிஜிக்கு புதிததல்ல. இதற்கு முன்பாக 1971 இலும் 1995
    இலும் அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 டிசம்பர் 24 அன்று
    மீண்டும் ஒரு முறை அவர் மீது செய்யப்பட்ட கொலை முயற்சி கந்தமாலில் கலவரங்களை
    ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுவாமிஜி கட்டாக் மருத்துவ கல்லூரி
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    அண்மைக்காலங்களில் ஒரிஸாவில் மாவோயிச வன்முறை அதிகமாயுள்ளது. இதற்கான காரணங்களை
    ஆராயும் காவல் துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் விளக்குகிறார்: ” அரசு
    சாரா அமைப்புகளை (NGOs) பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நாட்டுக்குள் வனவாசிகளை மதமாற்ற
    வருகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிஸா, ஆந்திர
    பிரதேசம், வடகிழக்கு ஆகிய மாநிலங்களில். மிஷனரிகளும் அவர்களது துணைவர்களுமாக இந்த
    பிரதேசங்களில் நிலவும் வறுமையை பயன்படுத்தி செயல்படுகின்றனர். வடகிழக்கு
    பிரதேசங்களில் பிரிவினைவாத அமைப்புகளில் இவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி
    பெறுகின்றனர். ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிஸா, ஆந்திர பிரதேசம்
    ஆகிய மாநிலங்களில் இவர்கள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளில் பயிற்சி பெறுகின்றனர்.”
    கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய்
    மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட்
    கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார். நேற்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி
    அன்று இரவு ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் கொண்ட மாவோயிஸ்ட்கள் வனவாசி
    குழந்தைகளுக்கான இந்த கல்வி சாலை- ஆசிரமத்தை தாக்கியுள்ளனர். இதில் சுவாமி
    லக்ஷ்மணானந்த சரஸ்வதியும் அங்கு தங்கி படிக்கும் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர்
    பலியாகியுள்ளனர்.
    டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வீடியோ
    http://broadband.indiatimes.com/videoshow/3397602.cms
    வனவாசிகளின் மேம்பாட்டுக்காகவும் ஆன்ம உரிமைக்காகவும் தன்னையே பலிதானமாக
    தந்திருக்கிறார் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி. நர சேவை எனும் நாராயண சேவையில் தன்னை
    ஈடுபடுத்தி அந்த கண்ணனின் ஜன்மாஷ்டமி அன்று கண்ணன் பாதம் சேர்ந்திருக்கும்
    அத்துறவியின் தியாகத்துக்கு தமிழ்இந்து.காம் தலை வணங்குகிறது. அவரது ஆன்மா கண்ணன்
    திருவடிகளை சேர்ந்துவிட்டது. மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த
    இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள் அனைவரது ஆன்மாக்களும்
    நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறது தமிழ்இந்து.காம். சுவாமி லக்ஷ்மணானந்த
    சரஸ்வதியின் சேவையை முன்னேற்று செல்ல இந்து சமுதாயத்தை வேண்டுகிறோம்

    வெல்க தமிழ்

    என்றும் பணிவுடன்
    நாவல்பாக்கம் ஜகந்நாதன் கிருஷ்ணா

    தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து தமிழில் மட்டும் பேசுங்கள்
  • Sir,

    Humans changed beasts will never value life. today the world is going only
    in such state. we are all mute spectators and cannot make much difference
    because all who sit in power and pride appreciate such attrocities. Lets
    pray that this doesnot spread into all individuals in this world. if that
    happens, then that would be the end of mankind. no natural calamity is
    needed to erase humans from this world. we oursleves are more than enough.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters