Thirumurai Koorum Marai,Vedam, Velvi -6 - some more
  • இந்த முத்தீ ஓம்புதல், வேள்வி எல்லாம் பார்த்தோம். இந்த முத்தீ ஓம்புதல்
    எல்லாம் எப்போ தொடங்கி இங்க இருக்குனு பார்க்கலாம்.

    சங்க காலத்துல வர்ணம் இருந்தது. ஆனா அது தொழில் முறைல மட்டும்
    தான்.

    கபிலர் பாரி நட்பு நமக்கு தெரியும். அவர் பாரி பெண்களை எப்படி சொல்கிறார் என்பதும் தெரியும். ( நாம திருக்கோவலூர் கல்வெட்டும் பார்த்தோம் ) இருந்தாலும் மீண்டும் ஒருமுறை புறநானூறு.பாடல் 201.

    பாரி மகளிர்; யானே
    தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
    அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;

    ஒரு அந்தணனுக்கும் அரசனுக்கும் நட்பு. (கபிலரை புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன் என்று
    பாடுகிறார் மாறோக்கத்து
    நப்பசலையார் Puram 126) அவன் மகள்களை இவன் தன் மகள்கள் என்று கூறுகிறான்.
    ஒவ்வொரு அரசனாக சென்று இறைஞ்சுகிறான். இறுதியில் ஒரு மகளுக்கு மணம் முடித்து மற்றவளை அந்தணர்கள் இடம் ஒப்படைத்து விட்டு ( அந்த காலத்தில் அதுதான் பாதுகாப்பு) நண்பனிடமே சென்று சேருகிறான்

    இதில் தெரிவது வர்ணம் இருந்தது , பேதம இல்லை

    புறநானூறு பாடல் என் 2

    போரும் சோறும்! பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
    பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன்
    சேரலாதன்.

    பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
    நாஅல் வேத நெறி திரியினும்

    சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இவன் குருக்ஷேற்ற போர்ல கௌரவர், பாண்டவர் இருவருக்கும் உணவு கொடுத்தமை வருகிறது. அவ்வளவு நடு நிலையானவன்.

    பால் புளிச்சு போகலாம் , பகலிலே இரவு வரலாம் இல்ல நாலு வேத நெறி பிறழ்ந்தும் போகலாம். ( அந்த காலத்துல வேத நெறி தவரறது பகல்ல சூரியன் வராம போறதுக்கு
    சமம் ) ஆனா நீ நடு நிலை தவற மாட்டாய்.

    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற், றுஞ்சும்
    பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

    புலவர் சொல்றாரு அந்தியில், அந்தணர் செய்யும் முத்தீ வழிபாட்டில் இமயமும் பொதிகையும்  உறங்க செல்கின்றன. அதாவது இந்த முத்தீ ஓம்பல் இமயம் முதல் குமரி வரை இருந்தது.

    புறநானூறு பாடல் என்
    6
    பாடியவர்:காரிகிழார்.
    பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
    வாடுக,

    பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் பேரிலேயே இவன் பல யாகங்களை செய்தவன் என்று தெரிய வரும். புலவர் சொல்கிறார்: " நான்மறை முனிவர் உனக்கு கை தூக்கி ஆசி கூறுகையில் , நீ அதை தலை வணங்கி ஏப்பாயாக

    புறநானூறு பாடல் என்
    6

    பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
    பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

    ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
    நான்மறை முதல்வர் சுற்ற மாக,
    மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!

    நீ போரில் வென்று , அந்த நாட்டில் நான்கு மறைகளிலும் நல்ல அறிவு உடையவர்களைக் கொண்டு, தோற்ற அரசர்கள் ஏவல்
    செய்ய, வேள்வி செய்தாய்

    பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,

    பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.( 43)

    நின் முன்னோர் எல்லாம்

    பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது

    நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,

    நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,

    யாரோ புலவர்கிட்ட அரசன் பார்பனர்களை இகழ்ந்துவிட்டான் என்று கூறி விட புலவரும் அவனிடம் போய், உன் முன்னோர்கள் எல்லாம் பார்பனர்களை நோகடிக்க மாட்டார்கள் என்று வெறுப்பாக கூறி விட்டார்.அவன் நான் அப்படி சொல்லியிருந்தால் வருந்துகிறேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறான். அவன் அவ்வாறு சொல்லவில்லை என்று பின்னாடி தெரிந்து
    புலவர் மன்னிப்பு கேட்கிறார்

    பாடியவர்: ஔவையார்.

    பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

    அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

    திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,(Puram 93)

    இறந்த எதிரிகளுக்கு நான்கு மறை அறிந்த அந்தணர்கள் புல் பறப்பி இறுதிச் சடங்குகள் செய்வார்கள்

    பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.(Puram 99)

    அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

    தேவர்களுக்கு ஆஹுதிஅளித்துப் பேணி -

    பாடியவர் : கபிலர்.

    பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. (Puram 122)

    அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;

    வீயாத் திருவின் விறல் கெழு தானை

    நெருப்பைக் காக்கும் அந்தணர்களுக்கு செல்வம் வழங்கியவன்

    புறம் 166 :பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.

    பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்
    விண்ணந்தாயன்.
    கௌணியன் என்று சொல்வது கௌண்டின்ய கோத்திரத்துக்காரன்

    நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

    முது முதல்வன் வாய் போகாது,

    ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

    ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

    மெய் அன்ன பொய் உணர்ந்து,

    பொய் ஓராது மெய் கொளீஇ,

    மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

    உரைசால் சிறப்பின் உரவோர் மருக

    சடை முடி தரித்த இறைவன். அவன் விரித்து உரைத்த வேதங்கள் நான்கினுக்கும், அங்கங்கள் ஆரிற்க்கும் எதிராகப் பேசி வாதிட்ட மாற்று சமயத்தவரை மறுத்து வாதாடி, உண்மையை உணரச் செய்தவர்கள் உன் முன்னோர்கள். அவர்கள் 21 துறைகள் முற்றிய யாகங்களைச செய்தவர்கள்.

    வினைக்கு வேண்டி நீ பூண்ட

    புலப் புல்வாய்க் கலைப் பச்சை

    சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;

    இந்த யாகத்திற்கு வேண்டிய கலை மான் தோல் போர்த்தி, பூணூல் அணிந்து வேள்வி செய்து முடித்தாய்

    மறம் கடிந்த அருங் கற்பின்,

    அறம் புகழ்ந்த வலை சூடிச்,

    சிறு நுதல், பேர் அகல் அல்குல்,

    சில சொல்லின் பல கூந்தல், நின்

    நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்

    தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;

    கற்பில் சிறந்த உன் மனைவியர் ( ஆமாம், மனைவியர்- Plural) நீ இட்ட ஏவல்களை செய்து முடித்தார்கள்

    காடு என்றா நாடுஎன்று ஆங்கு

    ஈரேழின் இடம் முட்டாது,

    நீர் நாண நெய் வழங்கியும்,

    எண் நாணப் பல வேட்டும்,

    மண் நாணப் புகழ் பரப்பியும்,

    அருங் கடிப் பெருங் காலை,

    விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,

    என்றும், காண்கதில் அம்ம, யாமே!

    தண்ணி மாதிரி நெய் விட்டு நீ செய்த வேள்விகள் எண்ணிலடங்கா. சிறந்த விருந்தும் வழங்கினை.அதுபோல் உண்டதில்லை.

    பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

    பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

    தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

    உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;

    செல்வல் அத்தை யானே; செல்லாது,

    மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

    கழைவளர் இமயம்போல,

    நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

    எங்களுக்கு திருப்தியாக வேண்டிய பரிசில்களை நீ கொடுத்தாய். காவிரி நாடு முழுவதும்சென்று அனைவர்க்கும் இதை உரைப்பேன்.

    பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.

    திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. (Puram 224)

    அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,

    முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த

    பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,

    பருதி உருவின் பல்படைப் புரிசை,

    எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,

    வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;

    இந்தப் பாடலில் கரிகால் சோழன் தன் மனைவியரோடு வேத விதிப்படி யுப ஸ்தம்பம் அமைத்து வேள்வி செய்தது கூறப் படுகிறது.

    அவனும் இவனும்!

    பாடியவர்: மாற்பித்தியார் ( Puram 251)

    ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,

    பாவை அன்ன குறுந்தொடி மகளிர்

    இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-

    கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,

    கான யானை தந்த விறகின்

    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,

    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

    எவனோ ஒருத்தன பத்தி இந்தப் புலவர் பாடி இருக்கார்.

    சின்ன வயசுல இவனைப் பார்த்த பெண்கள் பசலை நோய் வந்து கை வளை எல்லாம் கழண்டு போறது மாதிரி இருந்தான். இப்ப காட்டுல, அருவில, ஜடை முடிய குளிச்சு காய வச்சிட்டு, யானை கொடுத்த விறகுல, வேள்வித்தீ வளர்த்துக் கொண்டு
    இருக்கிறன்.

    பாடியவர்: மாற்பித்தியார்

    திணை: வாகை துறை: தாபத வாகை (Puram 252)

    கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

    தில்லை அன்ன புல்லென் சடையோடு,

    அள்இலைத் தாளி கொய்யு மோனே

    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

    சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’

    அடுத்த பாட்டும் அவனப் ( அவர்னு சொல்லணுமோ) பத்திதான். அருவில குளிச்சு குளிச்சு தலைமுடி நிறம் தில்லசெடி மாதிரி ஆயிடுச்சு.

    பாடியவர்: மதுரை வேளாசான்

    திணை: வாகை துறை : பார்ப்பன வாகை (Puram 305)

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,

    உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்

    எல்லி வந்து நில்லாது புக்குச்,

    சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே

    ஏணியும் சீப்பும் மாற்றி,

    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

    வயலைக்கொடி போல வாடிய இடுப்புடைய இளைய வயதுப் பார்ப்பான்,  இரவில் ஒலி எழுப்பாத வண்டியில் கோட்டைக்குள் போய் ஏதோ சில வார்த்தைகள்தான் சொன்னான். போருக்குத் தயாராக
    இருந்த யானைகள் எல்லாம் எப்போது தங்கள் மணியைக் கழட்டிவிட்டன. ( போர் முஸ்தீபு எல்லாம் நின்று விட்டது)

    பார்ப்பான் தூது புறத்தினில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைக்காக தொல்காப்பியம் பார்த்தபோது அகத்தினையுளும் பார்ப்பான் தூது சொல்லப்பட்டிருந்தது. எனக்கு அகப் பாட்டு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மிணி ஒரு அந்தணரை
    கிருஷ்ணருக்கு தூது அனுப்பியது நினைவுக்கு வந்தது.

    முள் எயிற்று மகளிர்!

    பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில. (Puram 361)

    நன்பல

    கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,

    அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகை

    நன்கு கற்றறிந்த, முற்றிய ( ஞானம் பொருந்திய) வேள்வி செய்கின்ற அந்தணர்க்கு அருமையான பாத்திரங்களை (பொன்னால் ஆன என்றும் சொல்லலாம்) நீர் வார்த்துக் ( தத்தம் செய்து) கொடுத்தாய்.

    உடம்பொடுஞ் சென்மார்!

    பாடியவர்: சிறுவெண்டேரையார் ( Puram 362)

    ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்

    நான்மறை குறித்தன்று அருளாகா மையின்

    அறம்குறித் தன்று; பொருளா குதலின்

    புலவர் சொல்றாரு : இந்த அரசனுங்க எல்லாம் சண்டை போடறது அந்தணர்களின் நான்கு வேதத்துல சொன்னதுக்காகவோ, இல்ல  அறத்தை காக்கவோ இல்லை. எல்லாம் பொருளின் பொருட்டே. ( காசுக்குதான்)

    இதுல இருந்து நான்மறைன்னு தமிழ்ல சொல்றது அறம், பொருள், இன்பம் , வீடு இல்லைன்னு தெரியுதா? அறம் வேற , பொருள் வேற, நான்மறை
    வேற.

    பாடியவர்: ஔவையார்.

    சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்
    பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப்
    பாடியது. (Puram 367)

    இதுல முதல்ல பார்க்க வேண்டியது சோழன் பேர். ராஜசூயம் வேட்டன்னு
    டைட்டில்.

    ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

    பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,

    சரியான பார்ப்பார்க்கு ரெண்டு கைலயும் நீர் விட்டு, முழுவது பொன்னும், பூவும் இட்டு

    ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

    முத்தீப் புரையக் காண்தக இருந்த

    இரு பிறப்பாளர்- த்விஜன் என்ற கருத்து - இன் முத்தீ போல நீவர் முவரும் ஒன்றாக இருக்கிறீர்கள்.

    பாடியவர்: உலோச்சனார்.

    பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.(377)

    அவி உணவினோர் - means தேவர்

    புறநானூறு படிச்சிட்டு சிலப்பதிகாரம் படிச்சா , இந்த மறை வழக்கத்தின் தொடர்ச்சி தெரியும்.

    சிலப்பதிகாரம் கொஞ்சம் பார்க்கலாம்.

    புகார்க் காண்டம்: சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்

    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

    தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.

    கோவலனும் கண்ணகியும் தீ வலம் வந்து மணம் செய்து கொண்டனர்.

    மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ

    நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,

    மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை

    இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து

    தேவாரம் சொல்றா மாதிரி இங்கயும் ஒரே புகை மயம்தான்

    மதுரைக்காண்டம்

    மாமுது மறையோன் வந்திருந் தோனை
    யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்

    கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்

    மாமறை யாளன்......................தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
    மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி

    கூறு நீயெனக்
    தீத்திறம் - தீ வழிபாடு

    அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

    வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்வேதத்தில் சொலப்பட்ட ஐந்து, எட்டு எழுத்து மந்திரங்கள்- பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம்

    அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
    பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்

    விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்

    மதுரையிலும் புகைதான்

    ஓத்துடை அந்தணர் உரைநூற்

    முதுமறைதேர் நாரதனார்

    றைநா வோசை யல்ல தியாவதும்

    மணிநா வோசை கேட்டது மிலனே

    வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்

    குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு

    வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த

    திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்

    தமிழ் ஞான சம்பந்தன் போல வண்டமிழ் மறையோற்

    ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்

    முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி

    ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்

    அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க

    வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப்

    வார்திகம்னா-
    The definition is:--

    Those who are knowledgeable say that a vArtika is a work which examines what
    is said, what is not said, and what is not well said in the original.

    நான் ஒரே அடியா எல்லோரும் நல்லவர்னு சொல்ல வரலை.

    கல்வெட்டுல கொலை செய்தவன், கோவில் நகை திருடியவன்னு
    எல்லாம் கூட வருது.

    திருவள்ளுவர் கூட ஒரு பக்கம் அரசனைப் பார்த்து - அறுதொழிலோர்
    நூல் மறப்பர்னு சொன்னாலும், அந்தணர்களைப் பார்த்து -
    மறந்தாலும் ஒத்துக்கொள்ளலாம் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் னு பயங்கர எச்சரிக்கை கொடுக்கறாரு.

    நீங்க வேதத்த மறந்துட்டாலும் திரும்ப கத்துக்கலாம். ஆனா பிறந்த

    குலத்தோட ஒழுக்கம் போச்சுனா, எல்லாமே போச்சுன்னு சொல்றாரு.
    அப்படினா இது ஒண்ணு அட்வான்ஸ் வார்நிங்கா இருக்கணும்.
    இல்ல அப்பவே சிலபேரு இப்ப மாதிரி இருந்திருக்கணும்.

    இப்ப இருக்கற நிலமைய அப்பவே சொல்லிட்டாரு.

    ஆனா ஒரேயடியா இந்த தமிழ்ல வேதம், மறைனு சொல்றது வேற வேற,
    வேள்வி எல்லாம் பின்னாடி வந்துச்சுனு சொல்றது எல்லாம் தப்புன்னு
    சொல்ல வரேன்.

    இப்ப அடுத்த
    கேள்வி. முத்தீ ஒம்புதல்னா என்ன?
    எதுக்கு இப்படி புகை மயம்?

    அதுவும் பார்ப்போம்.
  • --

    இந்த முத்தீ ஓம்புதல், வேள்வி எல்லாம் பார்த்தோம். இந்த முத்தீ ஓம்புதல்

    நீங்க வேதத்த மறந்துட்டாலும் திரும்ப கத்துக்கலாம். ஆனா
    பிறந்த

    குலத்தோட ஒழுக்கம் போச்சுனா, எல்லாமே போச்சுன்னு சொல்றாரு.
    அப்படினா இது ஒண்ணு அட்வான்ஸ் வார்நிங்கா இருக்கணும்.
    இல்ல அப்பவே சிலபேரு இப்ப மாதிரி இருந்திருக்கணும்.

    இப்ப இருக்கற நிலமைய அப்பவே சொல்லிட்டாரு.

    ஆனா ஒரேயடியா இந்த தமிழ்ல வேதம், மறைனு சொல்றது வேற வேற,
    வேள்வி எல்லாம் பின்னாடி வந்துச்சுனு சொல்றது எல்லாம் தப்புன்னு
    சொல்ல வரேன்.

    இப்ப
    அடுத்த
    கேள்வி. முத்தீ ஒம்புதல்னா என்ன?
    எதுக்கு இப்படி புகை மயம்?

    அதுவும் பார்ப்போம்.
  • Sankar sir...

    wonderful. I read all the parts of this series, and i feel this final part
    is the best of all. Because Tirumurais are considered to be latter
    literature and so people will say that vedas have already seeped into the
    culture.

    But quoting from Sangam literatures puts the nail in the coffin. But still
    people will say they are 'idai serugal' :)
    you can wake up a sleeping person, but many are acting as if they are
    sleeping. so nothing can be done.

    Anyway, wonderful compilation and thanks for sharing. I admire your
    knowledge and patience to compile this.

    If you have got these info from any other source, please do quote so that
    members can benefit.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters