Ponniyin Selvan Varalaatru Peravai
Discussions
Activity
Sign In
History Discussion
Thirumurai Koorum Marai,Vedam, Velvi -5 Sundarar, Manivasagar
shankypriyan
July 2010
Sundarar:
Since we swa many Nal Vedam and Arangam, i am giving only a few from Sundarar
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர்(7-18-9)
பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
கருப்ப றியலூர் (7-30-6)
பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து, ` போற்றி ` எனச்
சொல்லிப் பல வகை வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத
ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள
குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத
கொகுடிக் கோயில்(7-30-8)
குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை
நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை,
சாம வேதனைத் தன்னொப்பி லானைக் (7-68-1)
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை (7-68-5)
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னை ( 7-68-8)
நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை(7-88-1 )
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலை(7-88-5)
வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல், மலையாகிய வில்லை ஏந்தி
நின்று, மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே, நான்கு
வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், அறிவு மிகுந்து துதிக்கின்ற
திருமிழலையுள்
தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை (7-88-9)
தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது, வளவிய மாடங்களையுடைய
திருமிழலை
வேத வேதியர் வேத நீதிய
தோது வார்விரி நீர்மி ழலை(7-88-10)
சொற்பொருளாய்ச் சுருங்
காமறை நான்கினையும்
ஓதியன் (7-97-1)
சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள்
நான்கினையும் ஓதியவனும்,
அங்கமொ ராறவையும் அரு
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந்தணர்
எரி
மூன்றவை யோம்புமிடம் (7-97-7)
Manivasagar:
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை (8-48-1)
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்(8-2)
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும்
மறையோர் கோலங் காட்டி யருளலும்(8-3)
மூவா நான்மறை முதல்வா போற்றி (8-4)
Add a Comment
Howdy, Stranger!
It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!
Categories
All Discussions
12,769
Lounge
165
History Discussion
12,604
General
0
Top Posters
sps10142004
8456
abhivencat
4201
vj_episteme
3959
shankypriyan
2715
sridhar_rathinam
2530
seshadrigokul
1843
satish_arun
1423
dmaloo
1336
thiru
886
dhiwakarb
826
Powered by Vanilla