நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய், வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய், சொற்களும், சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்(4-8-7)
உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல, விடக்கறை பொருந்திய நீலகண்டர்