Thirumurai Koorum Marai,Vedam, Velvi -4 Appar
  • Appar says the following :

    நாறு கரந்தையி னானு நான்மறைக் கண்டத்தி னானும் (4-6-2)

    நறுமணம் கமழும் கரந்தைப் பூச்சூடியவனும், வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும்

    நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
    வல்லானை (4-6-7)

    நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
    புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம்
    புண்ணியனை

    சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து
    உரைத்தவனாய், வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய், சொற்களும்,
    சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய்

    மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்(4-8-7)

    உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு
    பாடுதலில் வல்ல, விடக்கறை பொருந்திய நீலகண்டர்

    அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே. (4-8-8)

    அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதி சக்தி ஒருபாகமாக உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்

    விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் (4-8-10)

    முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத, இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக
    முறுவல் செய்யும்.

    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்(4-11-5)

    செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே (4-23-4)

    சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச்
    சிற்றம்பலத்தே

    தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே(4-23-8)

    வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில்

    பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
    ஆடினார் (4-28-5)

    சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர்.


    விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்(4-30-2)

    வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் (4-33-7)

    வேத வடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவ ராய்

    வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்(4-35-5)

    வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் (4-45-1)

    சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை(4-45-4)

    சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு
    வாகி(4-45-5)
    அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த்

    வேதியா வேத கீதா (4-62-1)

    கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வி யாளர்
    வேதத்தின் பொருளர்
    வீழி மிழலையுள் விகிர்த னாரே. (4-64-1)

    பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய், வேள்வியை
    ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள
    சிவபெருமான் விளங்குகிறார்.

    அந்தியோ டுதய
    மந்த ணாளரா னெய்யால் வேட்கும்
    வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த
    னாரே.





    (4-64-7)

    காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும்
    விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார்

    பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்(4-68-8)

    ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
    வேதியர் வேதமும் வேள்வியு மாவன
    விண்ணுமண்ணும் (4-92-17)

    ஆதியும், அந்தமும் ஆகிய ஐயாறன் அடித் தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற
    அபர ஞானமும், ஞானப் பொருளாகிய பரஞானமும், ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள்
    ஓதும் வேதமும், வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும்

    மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்

    சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின (4-100-1)

    இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின்
    கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம்
    பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன.

    வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்(5-11-9)

    ஆலை யாரழ லந்தண ராகுதி
    வேலை யார்தொழும் வீழி மிழலையே.
    (5-12-10)

    மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய்
    வழிபடும் திருவீழிமிழலையே

    அரிய நான்மறை யாறங்க மாயைந்து
    புரியன் (5-18-3)

    பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்(5-30-2)

    அங்க மாறும் அருமறை நான்குடன்

    தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்( 5-60-3)

    நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
    ஆலன் (5-72-4) The Sanakadi Munivars were well versed in Vedas but could not understand the inner meaning.

    வேதமும் வேள்விப் புகையும் ஓவா

    விரிநீர் மிழலை (6-2-2)

    வேதத் தொழிலார் விரும்ப நின்றார்(6-10-3)

    நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்(6-10-6)

    வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்(6-16-3)

    நான்மறையி னொலிதோன்றும் (6-18-4)

    வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும் (6-21-2)

    மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்(6-22-3)

    வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்(6-22-9)

    ஓதாதே வேத முணர்ந்தான் தன்னை(6-26-2)

    சுருதங்க ளாற்றுதித்துத்
    தூநீ ராட்டித்
    தோத்திரங்கள் பலசொல்லித்
    தூபங் காட்டிக்(6-35-8)

    வேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச்
    சொல்லி நறுமணப் பொருள்களைப் புகைத்து,

    மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
    வழிபட்டார் (6-40-2)

    வேதனாய் வேதம் விரித்திட் டானே(6-44-4)

    மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி (6-56-1)
    மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே !

    மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
    மந்திரனை(6-66-1)

    மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி

    வேள்வியினின் பயனாய விமலன் தன்னை

    நாலாய மறைக்கிறைவ னாயி னானை

    நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
    (6-74-9)

    சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் (6-75-1)

    மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
    மிகுபுகைபோய் விண்பொழிய (6-75-4)

    வேதவழி ஒழுகுதலில் மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம்பெறும்
    வேள்வியிடத்து எழும் மிகு புகை விண்ணிடத்துப் போய் மழையைப் பெய்விக்க,

    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்

    ஆனவன்(6-87-1)

    கலையாரு நூலங்க மாயி னான்காண்(6-87-10)

    ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்

    உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்(6-88-2)

    ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்

    உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் (6-88-4)

    மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்

    கலையானைக்.......உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்

    புலியூர்எம் உத்தமனை(6-88-7)

    தகைநால் வேதம்

    ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்

    உள்ளானை (6-88-8)

    சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
    சாமத்தின் இசைவீணை
    தடவிக் கொண்டார்(6-96-10)

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters