ஆயிரத்தில்ஒருவன் - செல்வராகவன் சொன்ன கதை?
 • ஆயிரத்தில்ஒருவன் - செல்வராகவன் சொன்ன கதை?

  ஒரு வழியா இன்னைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து ஆயிரத்தின்ஒருவன்
  படத்தை பற்றி மனம் திறந்து பேசினார் இயக்குனர் செல்வராகவன்...

  சந்திப்பு வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு முதல் வேலையாக அவர்களின்
  கையில் படத்தின் கதைச்சுருக்கம் பற்றிய எழுத்துப்பிரதி தரப்பட்டது.

  இதோ செல்வராகவன் சார்பில் கொடுக்கப்பட்ட படத்தின் கதைச்சுருக்கம் :


  கி.பி 1279 - ல் சோழ,பாண்டியர்களின் கடைசி போர் நடைபெற்றது. அதில்
  சோழர்கள்,பாண்டியர்களால் தோற்கடிக்கப்படுகிறார்கள்.போரின் கடைசி
  தருணத்தில் தன் குலம் அழிந்து விடும் என்று எண்ணி சோழமன்னன் தன்
  இளவரசனையும்,பாண்டியர்களின் குலதெய்வ சிலையையும் ராஜகுருவிடம்
  ஒப்படைத்து"தூது வரும்வரை காத்திருக்கும்படி" எஞ்சி இருந்த சோழ மக்களோடு
  செல்ல உத்தரவு விடுகிறான்.அப்படி தொலைந்து போன சோழர்கள் பல நூறு
  ஆண்டுகளாக எங்கு சென்றார்கள்,என்ன ஆனார்கள் என்பது இன்றுவரை மர்மமாகவே
  உள்ளது.

  காணாமல் போன சோழர்களை தேடி பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி
  பயணத்தில் ஈடுபட்டனர்.அப்படி தேடி சென்று பலர் திரும்பவே இல்லை. சிலர்
  பாதியிலேயே திரும்பி வந்து சோழர்கள் சென்ற பாதை மிகுந்த அபாயகரமானது
  என்று எச்சரிக்கை விடுத்தனர்.அவர்களை தொடர்ந்து பிரதாப் போத்தன்
  (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்) செல்ல அவரும் காணாமல் போகிறார்.

  தொல்பொருள் ஆராய்ச்சி துறை ரீமாசென் தலைமையில் ஒரு குழு அமைக்கிறது.அந்த
  குழு பிரதாப்போத்தன் மகள் ஆண்ட்ரியாவின் உதவியோடு பயணத்தை
  தொடர்கிறது.அந்த குழுவில் ரீமாசென் ஆண்ட்ரியா,முன்னால் ராணுவ அதிகாரி
  அழகம் பெருமாள்,கூலி தொழிலாளர்களின் தலைவராக கார்த்தி,கூலி
  தொழிலாளர்களோடும் தீவிற்கு பயணத்தை தொடர்கின்றனர்.

  சோழர்கள் தப்பிச்சென்ற பாதையில் தங்கள் எதிரிகள் யாரும் பின்
  தொடரக்கூடாது என்று ஏழு தடைகளை உருவாக்கி
  சென்றனர்.கடல்,காட்டுவாசிகள்,காவல் வீரர்கள்,பாம்பு,பசி,தாகம்,கிராமம்
  என்று ஏழு தடைகளையும் இந்த குழுவினர்கள் பல உயிர் சேதத்துடன்
  கடக்கின்றனர்.கடைசியாக கார்த்தி,ரீமாசென்,ஆண்ட்ரியா,மூவரும் சோழர்கள்
  வந்து சென்ற கிராமைதை சென்றடைகின்றனர். அங்கு திடீரென்று எழும்
  மாயசத்தங்களால் மூவரும் தன்னிலை மறந்து பைத்தியங்களாக மாறுகின்றனர்.

  இவர்களின் வருகையை அறிந்து கொண்ட சோழர்களின் ராஜகுரு,அவர்களை ஆராய்ந்து
  கார்த்தியின் முதுகில் இருக்கும் சோழ சின்னமான புலிச்சின்னத்தை கண்டு
  அவன் சோழ தூதுவனாக இருப்பானோ என்று எண்ணி சோழர்கள் மறைந்து வாழ்ந்து
  கொண்டிருக்கும் குகைக்குள் தூக்கிச் செல்கின்றனர்.

  கார்த்தியின் நவீன பேச்சைக் கண்டு சோழ மன்னன் பார்த்திபன் ராஜகுருவின்
  எச்சரிக்கையை புறக்கணிக்கிறார். மூவருமே சோழ தூதுவர்கள் இல்லை,பகைவர்களாக
  இருக்கக்கூடும் என்று எண்ணி தாங்கள் வழிபடும் நிசம்ப சூதனி உருவத்தில்
  இருக்கும் காளி கோவிலுக்குள் நரபலி கொடுக்க அழைத்து வருகின்றனர்.

  800  வருடங்களுக்கும் மேலாக சோழர்கள் பசி,பட்டினியோடு வாழ்ந்து கொண்டு
  இருப்பதை கண்டு ஆண்ட்ரியாவும்,ரீமாசென்னும் வியப்படைகின்றனர். அப்போது
  உயிர் போகும் தருணத்தில் ரீமாசென் தன் மாய வித்தைகளை பயன்படுத்தி
  பார்திபனையும் சோழ மக்களையும்,தான் தான் சோழ தூது என்று நம்ப
  வைக்கிறாள்.800  ஆண்டுகளுக்கும் மேலாக சோழ தூதுக்காக காத்திருந்த
  மக்களும் மன்னர் பார்த்திபனும் இச்சதிக்கு ஆளாகிறார்கள்.பாண்டிய
  வம்சத்தில் பிறந்த ரீமாசென் சிறு வயதில் இருந்தே சோழர்களை கண்டுபிடித்து
  அளிக்கவும்,தன் குல தெய்வ சிலையை மீட்கவும்,பல கலைகளில் பயிற்சி
  பெற்றவள்.

  தன் உடலை ஆயுதமாக பயன்படுத்தி சாதுர்யமாக,சோழ மன்னன் பார்த்திபனை அழிக்க
  முயல்கிறாள்.ரீமாவின் செய்தியை நம்பி,பார்த்திபன் சோழ மக்களிடம் "தஞ்சை
  நோக்கி பயணிப்போம்" என்ற செய்தியை சொல்கிறார்.மக்கள் அனைவரும்
  சந்தோசமடைகின்றனர்.தஞ்சை திரும்பி செல்வோம் என்ற சந்தோசத்தில் வீர
  விளையாட்டு நடத்துகின்றனர்.அவ்விளையாட்டில் கார்த்தி வெற்றி பெற
  மன்னனும்,மக்களும் ஆச்சரியப்படுகின்றனர்.

  கார்த்தியின் வீரத்தை கண்டு தங்களின் ஒருவனாக ஏற்றுக்
  கொள்கின்றனர்.விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரியாவும்,கார்த்தியும் சோழ மக்களின்
  கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.இதற்கிடையில் ரீமா தன் மூதாதையர்களின்
  சபதத்தை நிறைவேற்ற குகைக்குள் இருக்கும் நீர் தேக்கத்தில் விஷத்தை கலந்து
  விட்டு,தனக்காக குகைக்கு வெளியே காத்திருக்கும் பாண்டிய படைகளை நோக்கி
  ஓடி விடுகிறாள்.

  செய்தி அறிந்த சோழமன்னன் மனமுடைந்து தற்கொலைக்கு முயல,மக்கள் அவரை
  தடுக்கின்றனர்.இந்த சதியின் முடிவை பார்த்துக்கொண்டிருக்கும்
  கார்த்தியின் மீது சோழ மக்கள் கோபப்பட்டு அடித்து
  துன்புறுத்துகின்றனர்.அந்த செயல்களை பார்த்துக்கொண்டிருக்கும்
  பார்த்திபனுக்கு,மூதாதையர்கள் தீட்டி வைத்து விட்டு போன ஓவியம நினைவுக்கு
  வருகிறது.மயக்கத்தில் இருக்கும் ராஜகுரு எழுந்து வந்து கார்த்தியின்
  கரம்பிடித்து தன் சக்திகளை கொடுத்து விட்டு இறந்து விடுகிறார்.
  அனைவரும் சோழ தூதுவன் கார்த்தி தான் என்று வணங்குகின்றனர்.

  மீண்டும் சோழர்களுக்கும்,பாண்டியர்களுக்கும் போர்
  நடைபெறுகிறது.பாண்டியர்களின் நவீன ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல்
  சோழ போர் வீரர்கள் அனைவரும் செத்து மடிகின்றனர்.சோழ மன்னன்
  பார்த்திபனையும்,கார்த்தியையும்,எஞ்சி இருந்த சோழ மக்களையும்
  பாண்டியர்கள் சிறை பிடிக்கின்றனர்.தங்கள் குலதெய்வ சிலையையும்
  மீட்கின்றனர்.

  சிறைபிடித்து கொண்டு வரப்பட்ட சோழமக்களை ரீமாவின் கூட்டத்தினர்
  மானபங்கபடுத்தி துன்புறுத்தி கொல்கின்றனர்.பார்த்திபன் தன் இயலாமையை
  எண்ணி வேதனைபட்டு உயிர் விடுகிறார்.அந்த கொடுமைகளை பார்த்துக்கொண்டு
  இருக்கும் பார்த்திபனின் மகன் இளவரசன் தப்பித்து ஓடுகிறான்.

  பின் தொடர்ந்து சென்ற கார்த்தி அவனை காப்பாற்றி தூக்கிக் கொண்டு
  காட்டுக்குள் நடக்கிறார்."சோழன் பயணம் தொடரும்" என்ற வரிகளோடு படம்
  முடிகிறது.

  இது தான் செல்வராகன் படத்தில் சொல்ல வந்த கதை.

  இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க சரித்திரக்
  கதை கிடையாது.முழுக்க முழுக்க கற்பனையான கதை அதில் சரித்திர விஷயங்கள்
  தேவைப்பட்டதால் அதை கொஞ்சமாக சேர்த்திருக்கிறேன் என்றார் செல்வராகவன்.

  தொடர்ந்து அவர் பேசியபோது :

  நான் என்ன சொல்றது, படம் ரிலீஸ் ஆயிடுச்சி இனிமே நீங்க தான்
  சொல்லனும்.தமிழ்ல ஒரு புது முயற்சியை எடுக்கிறோம் அதற்கு தமிழர்களாகிய
  நீங்க  தான் ஆதரவு முழுதரனும்.நான் மீடியாக்கிட்ட கேக்குறதெல்லாம் ஒன்னே
  ஒன்னு தான்.

  அதுக்காக செல்வா எப்போ பார்த்தாலும் ஒதுங்கியே இருக்காருன்னு சொல்றாங்க
  இல்ல நான் யாரையும் விட்டு ஒதுங்கி இருக்கல,சின்னன வயசிலிருந்தே நான்
  அப்படித்தான் இருந்தேன்.அதுக்காக நான் ஒதுங்கி விடவில்லை.

  "அடுத்தகட்டம் அடுத்தகட்டம்" னு சொல்லிக்கிட்டே இருந்தே போதாது.அதுக்கு
  நீங்க தான் முழுமையான ஆதரவு கொடுக்கணும்.ஒரு தமிழன் புதுசா படம் முயற்சி
  செய்றாம்னா அதற்கு தமிழர்கள் தான் முழுமையான ஆதரவை தரனும், அப்போதான்
  நாம் அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.

  அத விட்டுட்டு குத்தம்,குறைகளை சொல்லிக்கிட்டிரும்தோம்னா எப்படி புது
  முயற்சிகளை பண்ண முடியும், நமக்குன்னு கனவுகள் இருந்தால் மட்டும் போதாது
  அதை நிறைவேத்துறதுக்கு எல்லாரும் ஆதரவு தரனும்.

  இதே மாதிரி ஆங்கிலப்படங்களை பார்க்கிறோம்,அதில் நிறைய குறைகள்
  இருந்தாலும் ஒரு குறையையும் நாம சொல்றதில்லை, 'அவதார்' படத்துல
  மேஜிக்ஸ்கூல் எங்கிருந்து வந்ததுன்னு கேட்டால் அது ஆங்கிலப்படம் அது
  அப்படித்த இருக்கும் சொல்றோம்.அதே நம்ம படத்துல வந்துச்சின்னா
  ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கிறோம்.

  எதுக்கேடுத்தாலும் "ஆங்கிலப்படங்கள் ஆங்கிலப்படங்கள்"னு சொல்றோம்.
  அதெல்லாம் ஒண்ணுமில்ல.., அவங்கள விட நல்ல படங்களை நம்மளாலவும் கண்டிப்பா
  படம் கொடுக்க முடியும்.தமிழன் மூளை ஒன்னும் அவிங்களுக்கு குறைஞ்சது
  கிடையாது ஆனா,அதற்கு நாம்தான் எல்லாரும் ஆதரவு தரனும், அப்படி தரும் போது
  இது மாதிரி புது முயற்சி தமிழ்சினிமாவுல இன்னும் நிறைய வரும்.

  சந்திப்பில் இது ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறதே?
  என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு : கண்டிப்பா இது ஆங்கிலப்படத்தின்
  தழுவல் இல்லை. நான் எந்த ஆங்கிலப்படத்தையும், பார்த்து காப்பியடிக்கவும்
  இல்லை. அப்படி யாராவது இந்தப் படத்தில் உள்ள காட்சிகளை எந்த
  ஆங்கிலப்படத்திலாவது பார்த்திருந்தால் அந்தப் படத்தின் டி.வி.டி.யை
  என்னிடம் கொடுங்கள். நான் பார்த்து விட்டு அது உண்மையாக இருந்தால் நான்
  இந்த சினிமாவை விட்டே விலகி விடுகிறேன் என்றார்.

  அடுத்து இந்தப் படத்தில் இறுதிக்காட்சிகளில் வரும் ராணுவ சம்பவங்கள்
  ஈழப்பிரச்சினையை சொல்கிறதா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு:

  இல்லை இதில் துளியளவும் ஈழப்பிரச்சனையை நான் கையாளவில்லை.(அப்போது
  குறுக்கே வந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்) ஈழத்தில் சம்பங்கள்
  நடந்தபோது இந்த படத்தின் படப்பிடிப்பே முழுவதுமாக முடிந்து விட்டது,அதை
  நாங்கள் படத்தில் சொல்லவில்லை என்றார்.
 • Give him the DVDs of Meckana's Gold, Gladiator, Lara Craft, let us see
  if he quits film industry.
  yes I agree, in none of the Hollywood movies, you can see a kuthu
  paatu involving lead roles., may be he meant it.. :)

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters