Article in JV on Ayirathil Oruvan - Reference to PS is made
 • பண்டைக் கால வரலாற்றையும் இன்றைய அறிவியல் யுகத்தின் வளர்ச்சியையும் கோத்து கதை
  பின்னி, ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
  பொங்கலுக்கு வெளியான அவரது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பரபரப்பாகப்
  பேசப்படும் நிலையில், அந்தப் படத்தைப் பற்றிய குமுறல்களும் கிளம்பியுள்ளன.
  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியரும் மக்கள்
  வழக்காறுகள் ஆய்வாளருமான முனைவர் சுந்தரேசன் நம்மிடம் பேசும்போது,

  'இது கற்பனைக் கதை என்று முன் கூட்டியே டைட்டில் போட்டுவிட்டால், எதை
  வேண்டுமானாலும்... எப்படி வேண்டுமானாலும் திரித்துக் காட்டலாம் என்று சில
  படைப்பாளிகள் நினைக்கிறார்கள். 'ஆயிரத்தில் ஒருவன்' சினிமா பார்க்கப் போய்
  எனக்கு பிரஷர் ஏறினதுதான் மிச்சம். ஆரம்பத்திலேயே சோழ, பாண்டிய வரலாற்றுக்கும்
  இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்று டைட்டில் போடுகிறார்கள். ஆனால்,
  கதை தொடங் குவதே தஞ்சாவூரில்தான். அதுவும் சோழப் பேரரசு முடிவடைந்த 1279-ம்
  ஆண்டு. கதையில் அந்தப் பேரரசின் கடைசிக் காலத்தில் சோழ இளவரசன் பாண்டியர்களின்
  குல தெய்வ விக்கிரகத்தோடு தப்பித்துச் செல்வதாகக் காட்சி துவங்குகிறது.
  உலகுக்கு கலாசாரத்தை, பண்பாட்டை கற்றுக் கொடுத்தவர்கள் நமது சோழப் பேரரசர்கள்.
  தேர்தல், குடவோலை முறை, சிற்பம், ஓவியம், நில அளவை என்று நாகரிகத்தின்
  உச்சத்தைத் தொட்ட அவர்களைப் போய் காட்டுமிராண்டிகளாக, உருவகப்
  படுத்தியிருக்கிறார்கள். ஒன்றாம் நூற்றாண்டிலேயே மரக்கலம் கட்டி கடல் கடந்து
  வெளிநாட்டுக்குப் போய் வாணிபம் செய்தவர்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக்
  கொள்ளையர்கள் போல சித்திரித்திருக்கிறார்கள். கி.பி. 1000-மாவது வருடத்தில்
  ராஜராஜன் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையை, சோழ தேசத்து மக்களின் செழிப்பை... பாடாத
  இலக்கியங்கள் இல்லை. இன்றைக்கும் அந்த கலை தாகத்துக்கான விசுவரூப சாட்சியாக
  நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அப்படி இருக்கும்போது அவனுக்கு பிறகு வந்த சோழ
  அரசர்கள் அந்த முன்னேறிய நாகரி கத்தின் வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள்
  என்பதைப் புரிந்துகொண்டு, அதன்படிதானே கதை புனைய வேண்டும்? ஆனால், இந்தக்
  கதையில் வரும் சோழ மன்னனும், சோழ தேசத்து மக்களும் எங்கோ ஓரிடத்தில்
  பதுங்கியிருந்து கொண்டு கொடிய காட்டு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஊருக்கெல்லாம்
  சோறு அளித்த சோழர்கள், ஒரு துண்டு இறைச்சிக்கு அடித்துக் கொண்டு சாகிறார்கள்.

  அமுதூட்டிய முலையை அவிழ்த்து, அதில் பாலுக்கு பதில் ரத்தம்தான் வருகிறது என்று
  பிழிந்து காட்டி, ஒரு துண்டு இறைச்சி வாங்கிச் செல்கிறாள் ஒரு சோழ தேசப் பெண்.
  எதிரியையும் மன்னித்த மாண்புடைய சோழர்கள், அகப்படும் பெண்களை எல்லாம்
  துகிலுரிப்பவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் வரலாற்றுப் பிழைகள்
  கருத்துப் பிழைகள் நிறைந்த ஓர் அபத்தக் களஞ்சியமாக இந்த படம் இருக்கிறது!''
  என்று ஆவேசப்பட்டார் சுந்தரேசன்.

  கடந்த 40 ஆண்டுகளாக சோழர்கள் பற்றிய தொடர் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவரும்,
  சோழர் தொடர்பான 25 நூல்களை எழுதியவரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான
  பேராசிரியர் குடவாயில் பால சுப்ரமணியனிடம் கேட்டோம்.

  ''சமீப காலமாக சோழர்களையும் அவர்களது வரலாற்றையும் கேவலப்படுத்துவற்கும்,
  திரித்துப் புனைவதற்கும் ஒரு கும்பலே செயல்படுவதாகத் தெரிகிறது. 'தசாவதாரம்'
  படத்தில் குலோத்துங்க சோழனை அசிங்கப்படுத்தினார்கள். கோவிந்தராஜப் பெருமாளுக்கு
  கோயில் கட்டியவனே அவன்தான்; திருவரங்கப் பெருமாளுக்கு அதிக அளவு கொடை
  கொடுத்தவனும் அவன்தான். அப்படி அவன் பெருமாள் தாசனாகவே இருந்தவன்.
  அப்படிப்பட்டவனை கடலில் தூக்கிப் போடும் பெரும் கொடுங்கோலனாகச்
  சித்திரித்திருந்தார்கள். இப்போது சோழர்களை பராரி களாக, வாழ வழியற்றவர்களாகச்
  சித்திரித்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறது.

  கற்பனைக் கதை என்பவர்கள் அதில் வரும் கதா பாத்திரங்களையும் குப்பன், சுப்பன்
  என்று கற்பனைப் பாத்திரங்களாகவே அமைக்க வேண்டியதுதானே? சோழர்களின் பெயரையும்,
  புலிச் சின்னத்தையும் எதற்குப் பயன்படுத்தினார்கள்? இப்போது வரும் இளைய
  தலைமுறையினருக்கு படம் பார்க்கும்போது அது கற்பனை என்பதெல்லாம் புரியாது.
  கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் 40 சதவிகிதம் வரலாற்றுச் செய்திகளும்
  60 சதவிதம் புனைவும் இருந் தது. ஆனால், அதை படித்த அத்தனை பேரும் அதில் வரும்
  கற்பனைப் பாத்திரமான நந்தினியைப் பற்றி இன்னும்கூட பிரமிப்பு நீங்காமல்
  எங்களைப் போன்றவர்களிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு காட்சிப்
  படுத்துதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நம் தமிழ் மக்கள், இது போன்ற சினிமா
  காட்சிகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டால் என்ன கதியாகும்?'' என்று விசனப்பட்ட
  பாலசுப்ர மணியன்,

  ''ராஜராஜனின் ஆயிரமாவது வருடத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் இப்படி ஒரு
  படத்தை எடுத்திருக்க வேண்டாம். மக்களிடம் இருந்த நிலங்களையெல்லாம் பிடுங்கி
  அந்தணர்களுக்குக் கொடுத்தவன் ராஜராஜன் என்பதாக இப்போது ஒரு செய்தியை பரப்பி
  வருகிறார்கள் சிலர். இதையெல்லாம் பார்க்கும்போது சோழர்களுக்கு எதிரான கருத்து
  யுத்தம் ஒன்று சந்தடியில்லாமல் துவங்கியிருப்பதாகவே தோன்றுகிறது...'' என்றார்
  ஆதங்கமாக.

  இது குறித்து இயக்குநர் செல்வராகவனிடம் கேட் டோம். ''படத்தின் ஆரம்பத்திலேயே
  அது கற்பனைக் கதை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டோம். அதையும் மீறி அதனை நிஜக்
  கதை எனச் சொல்லி, சர்ச்சை கிளப்பினால்... அதற்கு என்ன சொல்ல முடியும்?
  சோழர்களைப் பற்றி தவறாகச் சித்திரிக்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. ஒரு
  படத்தை, படமாக மட்டும் பாருங்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையான தரத்தில்
  'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை செய்திருக்கிறோம். அதைப் பாராட்டா விட்டாலும்
  பரவாயில்லை. இப்படி சர்ச்சை கிளப்பி தமிழ் சினிமாவின் தர உயர்வுக்குத் தடை
  போடாமலிருந்தால் சரி... யாரையும் காயப்படுத்தாத கற்பனைக் கதைதான் அது.
  அதனால்தான் அந்தப் படத்தின் முடிவில் 'தொடரும்' எனப் போட்டிருக்கிறேன்.
  கண்டிப்பாக அந்தப் படத்தின் தொடர்ச்சியை விரைவிலேயே எடுப்பேன்!'' எனச் சொன்னார்
  செல்வராகவன்.
 • Ayya link paste pannunga I can see only garbled characters.
 • Ena koduma saravanan.. Edula thodarchi veraya..
 • Please do send a screen shot :-)) Mucho Gracias
 • Attached Tiff file has 4 pages within it... save it, right click and
  preview..
 • Thodarchi seri - pakarathu yaaru ???

  Seriously, the more I think of it, I wish i could sue these guys for defaming the greatest empire south has seen. It is a question of our morals - how dare they show our ancestors as cannibals !!! that too from the chola clan!
  How dare they use the army for atrocities against women !!!

  Being stupid is onething - defaming our basic ethos is another.

  - R
 • Hi
  what is the box office response to the movie?


  venketesh
 • from what I hear, very poor.
 • indianaiyum thamilanaiyum indu kalacharaththaiyum thavaraga palaper kay aandu irunthaalum inidano thamilano indu kalacharamo sarithiramo kettu ponathaka sarithiram illai yetho panam sambaathikka oru vali avarkalukku vittuviduvom naam meendum meendum alasi aarainthaal avarkalukku thaan vilambaram kidaikkum yenave naam adutha yosanai pannuvom vaarungal ayya

  somasundram
 • I have not seen the movie and so can not totally say one way or the other. But Hollywood makes numerous mistakes too. Yet that does not give freedom for others to make mistakes.

  But isn't it refreshing to note that somebody has even the guts/business acumen to make references to history in our cinema?
 • I have not seen the movie however I agree with intellisurfer's comments. The
  theme or the story's oneline seems to be interesting and I am delighted with
  the way the references are made to history. May be Selva failed miserably in
  the way he transformed the story to screen.

  Atleast it should be a good start for tamil cinema to turn their attention
  to such differnt stories.
 • In Hindi they say if one can not get ghee with a straight finger, one has to crook the finer (tedi ungli). It looks like in 1989, there was a survey or poll in USA; and they found Americans to be highly ignorant of geography. So National Geographic created the GeoBee competition so that it catches kids when they are young.

  Adhe maadiri dhan. Hopefully such movies create interest among youngsters. We also need to think about "out of sight out of mind" {is it Marketing or Psychology 101?}; kids without an exposure to history will not nurture interest.

  Such movies, if they make money, will inspire other movie makers to churn out movies in this genre. Keeping things interesting will be a core issue. So they will have to take lots of liberty. In the course more people will be exposed; some are going to gain interest and do their own research on the Internet and discover "truth" {which even scholars keep debating}.

  I urge to look at the glass being half full, or look at the forest instead of the trees, or look at the light at the end of tunnel.....

  GRS
 • I differ here.

  Noting into history is something, but totally changing the cultural scene is not correct.

  Ex: in 300, Xerxes was shown as a cruel tyrant but that was acceptable compared to cannibalism of Cholas.
  Menelaus again was not portrayed such in Troy.

  Cholas were very civilized when it came to literature / culture etc, resorting to cannibalistic behavior was the least one can draw from there (esp when they are smart enough to toy around with laws of nature).

  A confused selvaragavan possibly took the orcs from lord of rings to build the savage cannibal nature.

  As such our history is being lost, people are less aware of the great kings of past, now with a negative story in the blocks,we can be walking down the path of no return.

  This is NOT the impression I want to give my younger generation about our cultural past.

  And, do you want to show that this is what our Army does to children ?

  I can understand that some of these blokes may not be responsible when it comes to the greater good of people, but this looks to me as 'consciously irresponsible' behavior.

  - R
 • Well, I can more only after watching it. If he implies the earlier Cholas as Cannibals, then it is one thing but if he is showing the "fictitious present day Cholas" then there is no historical basis for argument or object.

  I have the right to change my opinion after I watch the movie.
 • Well, you see, he can add a disclaimer, but the very fact that he uses the word Chola / Pandiya and the year 1249 ad etc are more than enough as a damage to the ancient kingdom.

  He could have rather used some 'Malar desam king' or 'inba theevu expedition' or some BS like that.

  Well MGR / Sivaji / Gemini etc played kingly roles using fictional kingdoms.
  If you want to relate fictional kingdom yet portray a very good drama, check out manohara !

  Feel free to watch the movie, I would recommend Scope mouth wash post viewing :-)

  - R
 • mayil vizhi maan

  kalki's last printed story for diwali malar 1954

  the ancient cholas live in exile on a citystate in an island. they are a very refined population
  the island opposite however is housed by cannibals.

  so can see where selva got his idea....  venketesh
 • Hi group...

  It is surprise to here that members from PS Group is viewing movies directed by Selvaragavan.... I didnt saw any of his movies...will never see any in future...

  Tamil film industry had directors like AP Nagarajan, BR Banthulu etc etc... Mr. Selvaragavan should not spoil their names. Sorry to have him in Tamil Industry.

  He is telling that he holds a BE Degree...Possession of any degree does not necessarily mean possession of any knowledge...! and absecence of any degree does not necessarily mean absecence of knowledge...

  Arul Ganesh
 • Kudavayil Sir is correct. There are so many stories propagated now. ( The Chidambaram South gate/Entrance is one- which they even have included in the wikimap). We too passionately discussed such propaganda in this forum.
   
  But telling that to Junior vikadan is the problem. Such publications only create such news and do such propaganda.
   
 • > Kudavayil Sir is correct. There are so many stories propagated now.


  even kudavoil sir takes off sometimes. his kampoja stone in kumbakonam was one. and when we were in tanjore he gave a lecture to this group on how malik atacked tanjore big temple with details of attack on the lingam and how it would not break etc.

  its highly impropable that malik's route from chidambaram to srirangam even touched tanjore  venketesh
 • I Give below this logic

  Malik kafur means his army. That explains why so many idols were kept burried in Tanjore district. Since tanjore temple had lot of royal patronage, he might have tried that. The legends say he left the madurai temple also. Kal yanai Karumbu story. The duplicate lingam was kept when Tuglaq attacked.
 • Pandyas destroyed Tanjore?. Kulothunga III simply left things as it is and spent time. Itshould be just a simple capture. Since Pandyas controlled vast territory and hence would not have done anything in that food bowl. Even if they destroyed would have ensured that the entire delta is populated and cultivated.
 • sundara pandyan destroyed all buildings in tanjore except temples and monuments to poet ploughed it with mules and sowed visha kaduku... discussed many times in our group
 • Was it left like that for long?

  was tanjore deserted till vijayanagar?
 • > Was it left like that for long?
  >
  > was tanjore deserted till vijayanagar?
  >

  you cant count till vijaya nagar
  only as long as the pandyan was on the throne til about 1320
  after turk attacks started entire tamilnadu was depopulated just like tanjore.
  > regards
  >
 • a repost from past

  Re: Did RRC looted maldives and lanka, similar to britishers?

  >
  > If it were true, that could possibly be one of the reasons why
  many people do not talk or sing the praises of RJC and are proud of
  RRC. May be a reason why Kalki chose RRC too :-)
  >
  > War is war - no question. But chola's administration was
  different, check out their structures of taxing vs british.
  >

  the cholas and pandyas feud runs for centuries. both of them
  alternate in claiming the praise of severing the head of the other.
  Would be nice to list out number of such kings.

  i am reading an interesting book - Dr. Kudavoil Balasubramanian's -
  Gopura kalai marapu. An excellant repository of well researched
  information neatly illustrated and indexed - a must read. Why i
  mention it is, he cites the blood feud between the two as one of
  reasons ( apart from our famed malik kafur) for lack of significant
  palace / podium / victory arches etc in tamil land. two references
  can be singled out- Kulottunga III on invading madurai - destroys
  the pandya palace, the throne and grounds it to dust, not stopping
  with that he ploughs it with a donkey and sows varagu!!!

  not to be outdone, sundara pandian repays the cholas in the same
  coin - while invading uraiyur and tanjore.....large building
  complexes are set ablaze and he too destroys the chola
  palace,throne - grounds it to dust, and ploughs it using a donkey
  and sows varagu....

  they also melted each others minted coins ( dont blame them - it
  would have been humiliating to see the seated tiger looking at the
  upright bow and the hanging fishes ( dead))

  remember - the cholas pursued the pandya haram for two centuries and
  occupied the better part of lanka just for it - the srilankan king
  on his part refused to part with it despite all hardships..

  on the chola/chera front - the very first sagasam of RRC is kandalur
  salai where he takes the name of keralanthagan....he is said to set
  ablaze the militiary academy at kandalur salai.

  at that time, they must have spoken the same language,worshipped the
  same gods, studied the same scriptures, wore similar clothes, their
  people were of same color, creed.....yet the blood - drove them into
  this feud. a case in point is RJC did try and merge the two clans -
  but didnt succeed...

  vj
 • Any luck on Madura Vijayam. supposed to be the most authentic. ? ( after removing the uruvagams)
 • Did he show the medieval cholas as cannibals or the isolated group in contemporary times as cannibals. There lies an important distinction.

  grs
 • The clan which is living in an isolated island facing Hunger.

  He showed a ruined city first, where the culture was preserved. when the times were good.,

  but the Barbariansim, king gifting a haram etc etc is totally unwanted.

  He started off well with a good plot, but some how went some where and  ended with a very bad movie.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters