900 years old Hospital - text of inscription
 • Gandhi Sir,

  You can see that in this link

  http://reachhistory.blogspot.com/

  I have also given the full text below.

  இராசேந்திரசோழன் மெய்கீர்த்தி திருமன்னிவளர இருநிலமடந்தையும் போர்செயற் பாவையுஞ்சீர்தனிச்செல்வியும்
  தன்பெரும் தேவியராகி இன்புற நெடுதியலூழியுன் இடைதுறைநாடும் தொடர் வனவேலி
  பிடர்வனவாசியும் சுள்ளிச்சூழ்மதிய் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கு அருமுரண்
  மண்ணைக்கடக்கமும் பொருகடல்மீழி முத்தரையர் தம் முடியும் ஆங்கவர்தேவியர்
  ஓங்கெழில்முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும்
  இந்திரன் ஆரமும் தெண்டிரல் ஈழமண்டலமுழுவதும் எறிபடைக்கேரளர்
  முறைமையிற்சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ்சேர்
  செங்கதிர்பாலையுஞ்சங்கதிர்வேலை தொல்பெருங்காவல் பல்பழந்தீவுஞ்செருவிற்சினவி
  இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன்மேவரும் சாந்திமற்றீவரண் கருதி
  இருத்திய திருந்தகமுடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் ஒதுகிட்டு ஒளிந்த
  செயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியில் இரட்டபாடி ஏழரையிலக்கமும்
  நவநிதிக்குலப்பெருமலைகளும் விக்கிரம சக்கரக்கோட்ட முதிர்பட வல்லை மதுரை
  மண்டலமும் கரமிடை வளைய் நாமிணைக்கோணையும் வெஞ்சிலவீரர் பஞ்சப்பள்ளியும்
  பாசுடைபணைய மாசுடைதேசமும் அயர்வி வெண்கீர்த்தியாதிநகர் அவையில் சந்த்ரிரன்
  தொல்குலத்து இந்திரரதனுந்தன் விளையரர்களத்து கிளையொடும்பிடித்து வலத்தொடு
  குலதனக்குவையும் கட்டரண் செறிமிளை ஒட்டவிஷியமும் பூசுரர்சேய்நல் கோசலை
  நாடும் தன்மபாலனை வெம்முனையழித்து வண்டுறைச்சாலை தண்டபுத்தியும் .... Text no. 2 ஆதுரசாலை
  வீரசோழனில் வியாதிப்பட்டு கிடப்பார் பதினைவர்க்கு பேரால் அரிசி நாழியாக
  அரிசி குறுணி எழுநாழிக்கு நெல் தூணி ஐந்நாழி உரியும் வியாதிப்பட்டு
  கிடப்பார்க்கு பலபடி நிபந்தக்காரர்க்கும் கிடைகளுக்கும் பாத்திரர்க்கும்
  சிவஸ்யஞ்சொல்லியாணியாக தனக்கும் தன் வர்க்கத்தாருக்கும் பெற்றுடைய
  ஆலப்பாக்கத்து சவணன் கோதண்டராமன் அசுவத்தம்பட்டனுக்கு நாளொன்றுக்கு நெல்
  முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவானுக்கு நாளொன்றுக்கு
  நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்து
  விறகிட்டு பரியாரம் பண்ணுவரிருவருக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியாக
  நெல்பதக்கும் காசொன்றாக காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி
  மருந்திடும் பெண்டுகளிருவருக்கு பேரால் நாநாழியாக நாளொன்றுக்கு நெல்
  குறுணியும் பேரால் காசரையாக காசொன்றும் ஆதுலர்க்கும் கிடைகளுக்கும்
  பாத்திரருக்கும் வேண்டும் பணிசெய்யும் நாவிசன் ஒருவனுக்கு நாளொன்றுக்கு
  நாநாழி ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றிலருமருந்து ஸ்ரீப்ராஹ்ம்ய மகருக்கு
  இப்படியொன்றும் ... இப்படி ஹரிதகி படி இரண்டும் கோமூத்திர ஹரிதகி
  படியிரண்டும் தசமூலஹரிதகி படியொன்றும் பிப்லாதக ஹரிதகி படியொன்றும்
  கண்டீரம் படியொன்றும் பலாகோரண்டதைலம் தூணியும் பஞ்சார்கதைலம் தூணியும்
  ஸ்ரீலஸ்ரத்தா கோரண்டதைலம் தூணியும் கண்யாதிதைலம் தூணியும் ..... பதக்கும்
  சாக்ருதம் பதக்கும் வில்வாதி க்ருதம் பதக்கும் மண்டூரவாகம் இரண்டாயிரமும்
  மஹாசுமனத்ரி இரண்டாயிரமும் தந்த்ராதி இரண்டாயிரமும் பஞ்சகல்பம்
  தூணிபதக்கும் கல்யாணலவணம் தூணி பதக்கும் இவையடுகைக்கு வேண்டும்
  மருந்துகளுக்கும் நெய்யும் ... வும் உள்ளிட்ட .... ஆண்டுதோரும் புராண..
  சர்வ பசுவிநெய் பதக்கும் கொள்ள காசுநாற்பதும் ஆதுலசாலையில்
  இரா எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெயாழாக்காக நாள் முன்னூற்றறுபதுக்கு
  எண்ணெய் நாற்பத்தைந்து நாழிக்கு காசிரண்டேகாலும்.. ஜனநாதன்... ல
  தன்யனுக்கு பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசி திருவோணத்தளவும்
  பரம்பாலூர... தண்ணீர் கொடுவந்து வைத்துச் சாய்ப்பான் ஒருவனுக்கு
  நாளொன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றெண்பதுக்கு நெல் பதினெண்கலமும்
  ஏலத்துக்கும் இலாமிச்சத்துக்கும் நெல் இரு... ண்ணியாஹம் பண்ணின
  பிராமணர்க்கு தக்ஷிணாகம் வெற்றிலை வெருங்காய்க்கும் நெல் கலனே தூணி
  இருநாழி முழக்கே முச்செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாயன்
  வர்க்கத்தார்க்கு புரட்டாதி திருவோணத்து நாள் உடுக்கும் பரிசட்டம்
  இரண்டுக்கு காசொன்றே எழுமாவும் மூவாயிரத்து இருநூற்று நாற்பத்து முக்கலனே
  இருதூணி பதக்கு அறுநாழி உழக்கே முச்செவிடுக்கும் காசு இருனூற்றொருபத்து
  ஆறறையே இரண்டு மாவுக்கும் இக்காசு பத்ராவிடில் காசொன்றுக்கு தண்டவாணி
  ஒன்றோடொக்கும் பொன்காசு நிறைகால் இடுவதாகவும் இப்படியாண்டு ஆறாவது
  நிபந்தம் செய்தபடி இந்நிபந்தம் தழுவக்குழைந்தானான அபிமானபேரு பிரம்ம
  மாராயன் Text no. 3 கோவிசய
  நிருபதுங்க பல்லவ விக்கிரம வருமக்கு யாண்டு இருபத்து நாலாவது
  காடுபட்டிமுத்தரையர் மகனார் அரிகண்டப்பெருமானாருக்கு
  ஊற்றுக்காட்டுக்கோட்டத்து சீயபுரத்து சபையோமொட்டிக்கொடுத்த பரிசாவது
  திருமுக்குடல் விஷ்ணுபடாரர்க்கு நுந்தாவிளக்கெரிப்பதற்க்கு தந்த எங்கள்
  கையிற்றந்த முப்பதின் களஞ்சு நாலுப் பொலியூட்டு ஆண்டுவரை களஞ்சின் வாய்
  மூன்று மஞ்சாடிபொன் ஆயனப்படியால் நாற்களஞ்சரையாலும் ஏறிலும் கறுங்காலும்
  நாற்பது நாழி எண்ணை நூற்றின்பதி ..
 • It is under the heading - field trip to thirumukkoodal

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters