பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?
நன்றி – எழுத்தாளர் ஜெயமோகன். சுட்டி https://www.jeyamohan.in/166897/ அ.பொன்னியின் செல்வன் நாவலை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்? ஐயத்துக்கு இடமில்லா ஓர் உண்மை, பொன்னியின் செல்வன்தான் தமிழிலேயே அதிகமாக வாசிக்கப்பட்ட நாவல். சரி, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இதுவரை பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் எவரெவர் என. கதையாவது கேட்டவர்கள் எத்தனை பேர் என? திகைப்படைவீர்கள். மிகமிகக்குறைவாகவே அதை வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது பொன்னியின் செல்வன் இதுவரை …
