1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்!
  • 1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்!

    P-01.jpg



    காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விடயமாக இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டு கால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.



    இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது. ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கும் நடைபெற வேண்டும்... ஆனால் 62 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகளும் நடக்காமல், குடமுழுக்கும் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கோவிலை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.. தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters