some tamil books
  • dear all,

    it happened to notice in web , some names of books in tamil deals with some historic personalities of Chola times and Inscriptional details. those details as follows,


    சோழர்களின் அரசியலின் அமைச்சர்களாகப், படைத்தலைவர்களாக, மற்ற மற்றத் துறைகளின்
    அதிகாரிகளாக விளங்கிய அருணிதிகலியன், அம்பலவன் பழுவூர் நக்கன், சிற்றிங்கணுடையான்,
    பார்த்திவேந்திராதிபன்மன், மதுராந்தகன் கண்டராதித்தன், பொய்கைநாடு கிழவன்,
    ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன், கருணாகரத் தொண்டைமான், நெற்குன்றூர்க் கிழார்,
    மணவில்கூத்தன், சேக்கிழார் அமராபரணன் சீயகங்கன், பெருமாள்நம்பிப் பல்லவராயன்,
    மணவாளப்பெருமாள் ஆகிய பதினான்கு பேர்களின் வரலாற்றுகளைத் தக்க சான்றுகளுடன் கூறும்
    நூல்சோழர்கால அரசியல் தலைவர்கள் என்னும் நூலாகும். நன்னூல் தோன்றக்
    காரணமான சீயகங்கன் மைசூர்ப்பகுதி கோலார் (குவளாலபுரம்) ஐத் தலைநகராகக் கொண்டு
    இரண்டாம் குலோத்துங்கனின் அதிகாரியாக இருந்து ஆட்சி புரிந்தவன் என்பதும், அவன்
    இயற்பெயர் திருவேகம்பமுடையான் என்பதும், அவன் மனைவி பெயர் அரிய பிள்ளை என்பதும்
    போன்ற நூற்றுக்கணக்கான புதிய தகவல்கள் இந்நூலுள் கல்வெட்டாதாரங்களுடன் உள்ளன.
    கல்லெழுத்துக்களில் என்னும் நூலில் கூத்து, இசை, நாடகம், நாட்டியம் முதலிய கலைகள் மூவேந்தர் காலங்களில்
    எவ்வெவ்வாறெல்லாம் சிறந்து விளங்கின எனக் கல்வெட்டாதாரங்களுடன் தெளிவாக்கப்
    பெற்றுள்ளன.
    காஞ்சிக் கடிகை,
    எத்துநூல் எண்பதுலட்சம், கல்லெழுத்துக்களில் கங்காபுரியினர், மனுசரிதக்
    கல்லெழுத்து, முதலாம் விக்ரமாதித்தனின் கத்வல் பட்டயங்கள், இரண்டாம் நந்திவர்மனின்
    காசாக்குடிச் செப்பேடுகள், நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகள், தந்தி சக்தி
    விடங்கியார், இசைஞானியார், இருவில்லிகள், எண்ணலங்காரம், தொனி, தோட்டிமையுடைய
    தொண்டர், நெல்வாயில் அரத்துறை, வாரணவாசி, கண்காள் காண்மின்களோ, கல்வெட்டுக்களும்
    இசையும், இரண்டாம் இராசராசனது திருவொற்றியூர்க் கல்லெழுத்து ஆகிய 18 கட்டுரைகளைக்
    கொண்டது ஆய்வுப்பேழை என்ற நூலாகும். முன்பெவரும் எழுதாத செய்திகள் பெரும்பாலும்
    உள்ள கட்டுரைகளே இவர்தம் கட்டுரை நூல்களில் இருக்கும் என்பதை இந்நூலும் நன்கு
    மெய்ப்பித்தது.
    கல்லெழுத்துக்களில்
    தேவார மூவர் என்னும் நூல் பல பதிப்புகள் கண்ட நூலாகும். மக்கட் பெயர்களாகத் தேவாரச்
    சொற்கள் பல வழங்கியமை, மூவர் பெருமக்களை மக்கள் வழிபட்ட வரலாறுகள் முதலிய பல்வேறு
    செய்திகள் கல்வெட்டாதாரங்களுடன் கூறப்பெற்ற நூல் இது. ஆச்சாள்புரக்
    கல்வெட்டிலிருந்து ஞானசம்பந்தரின் மனைவி பெயர் ‘சொக்கியார்’ என்று
    கண்டெழுதியுள்ளார். கோளறுபதிகத்தை ஞானசம்பந்தர் ‘ஆணைநமதேர்’ என நிறைவு செய்தார்.

    the highlighted words are the names of books written by சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பல்வேறு பட்டங்களைப் பெற்ற கா.ம. வேங்கடராமையா.


    Could any of us tell me that, where could I buy these books...

    the link of the site :

    http://venkataramiah.org/தமிழ்ப்_பணிகள்

    thanking you

    sakthisree

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters