பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவையின் ஒன்பதாவது ஆண்டுக் கூட்டம்
 • அன்புள்ள பொன்னியின் செல்வர்களே,

  திட்டமிட்டபடி, பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவையின்ஒன்பதாவது ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக சென்னையின் மையத்தில் அமைந்த தியாகராய நகரில் உள்ள பார்வதி பவனின் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

  பொன்னியின் செல்வனின் உறுப்பினர்கள் வெறும் கதை படிப்பவர்கள் மட்டுமல்ல. அறிவு ஜீவிகள். பல துறை வல்லுநர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.பொன்னியின் செல்வனின் வரலாற்று பேரவையின் தலைவர் சிவபாதசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

  முக்கிய விருந்தினர்களாக பத்தமாவதி, ராஜேந்திரன் மற்றும் பெரும் தொல்லியல் துறை அதிகாரி அவர்களும் மேடையில் அமர்ந்திருக்க, அவர்களை அறிமுகப்படுத்திய எஸ்.பி.எஸ் அவர்கள், வந்திருந்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்துதங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார்கள்.

  அறிமுகப்படலம் முடிந்த பிறகு, கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சி அமைந்தது.

  பள்ளிப்படை போன்ற மிக நுணுக்கமான கேள்விகளுக்கு பத்மாவதி மிகத்தெளிவாக பதில் அளித்தார். பள்ளிப்படை கட்ட என்ன விதிமுறைகளளைபின் பற்றவேண்டும் என்பதை அவர் விளக்கினார். எந்த அரசாங்கத்திலும் அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் அதுவும் அரசியல் சிக்கல் நிறைந்த நேரங்களில் அதிகாரிகளின் பங்களிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வளவு அவசியம் என்பதை மிக
  அழகாக பொன்னியின் செல்வன் கதையிலிருந்து விளக்கினார்.

  திரு ராஜேந்திரன் அவர்களும் சில பல கேள்விகளுக்கு மிகவும்ஆராய்ச்சி பூர்வமான பதில் அளித்தார்கள். பொன்னியின் செல்வனின்ஆர்வத்தில் வயிற்றுப் பசியைக் கூட மறந்து விட்டதுவரலாற்றுஆர்வர்களின் கூட்டம்.சிவபாத சேகரன்ஞாபகப்படுத்திய பிறகுதான் மதிய வேளை என்பது நினைவுக்கு வந்தது. மிகவும் அருமையான உணவு.

  சாப்பிட்டபிறகுபார்வைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களை வ ந்திருந்தவர்கள் பார்வையிட்டார்கள். டாக்டர் கைலாசம் அவர்களை நாம் இது வரை எழுத்தாளர்தான் என்று எண்ணியிருந்தோம். அவர் திறமையான வியாபாரி என்பதும் தெரிந்தது.தனது மலர்ச் சோலை மங்கையை சிரித்த முகத்துடன் அனைவருக்கும் காண்பித்து பல பிரதிகளை விற்றுவிட்டார்.சந்தடி சாக்கில் அவரின் புதிய புதினமான
  கயலையும் பலரிடம்விற்றார். எ.எஸ்.ஐ யின் சோழ முறல் புத்தகமும் நன்றாக விற்பனையாகியது.

  மதிய உணவு முடிந்ததும் மீண்டும் கூட்டம் கூடியது. ஸ்ரீலங்காவில் இருந்து வந்திருந்த சங்கரநாரயணன், கம்பனுக்கு முன்னால் ராமாயணம் என்றஆராய்ச்சிபூர்வமானஅருமையான படங்களுடன் பேசினார்.பல ஆலயங்களுக்கு சென்று மிகவும் கடினப்பட்டு புகைப்படம் எடுத்து அதைஆராய்ந்து சொன்னார்.

  அதைத் தொடர்ந்து வைரம் அவர்கள் சங்க கால இலக்கியத்திலிருந்து அருமையான பாடல்களையும் அதன் பொருளையும், பல வண்ணப்பூக்களைப் பற்றி அவர் சொன்ன விதமும் அனைவரையும் கவர்ந்தது.

  அடுத்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த விஜய் அவர்களின் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது. விஜய் அவர்கள் சிலைகளின் அழகையும் நுணுக்கத்தையும் சொல்ல சொல்ல அவரின் பேச்சில் அனைவரும் மயங்கினர். தொடர்ந்து கலிங்கா பாலு மிக அருமையான சொற்பொழிவு ஆற்றினார்.

  கூட்ட நேரம் முடிந்தாலும் அத்துடன் ஆர்வம் முடியவில்லை. சிவபாதசேகரன் அனைவரையும் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில்இன்றைய ராஜராஜசோழரானா சிவபாதசேகரன் அனைவருக்கும் பொற் காசுகள் வழங்கினார்.ஒரு சிலர் பல வேறு வேலைகளின் காரணமாக விலகிவிட்டாலும், பலர் முதல் மாடி வந்தனர்.

  கார்த்தி காளிங்கராயரும் அவரது துணைவியாரும், பலஆராய்ச்சிகளை மேற்கொண்டு காளிங்கராயரின் வம்சத்தின்ஊற்றை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதைச் சொன்னார்கள்.

  உறுப்பினர்கள் இ-புத்தகம் கொண்டு வரலாம் அதில் நமது பராம்பரியத்தை கலாசாரத்தைச் சொல்லலாம் என்று சொன்னார்கள்.

  விப்ரோ பாலு ஆலயங்களின் அடிப்படை விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றார். கலிங்கா பாலுவும், பிளாஸ்டிக் சந்திராவும் இந்த அறிய செயலை ஒருங்கிணைக்க இசைந்தார்கள். ஐந்நூறு வருடத்துக்கு முற்பட்ட ஆலயங்களையும், மசூதிகளையும், தேவலாயங்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றார்கள். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆலய விவரங்கள் முதல் கட்டமாக
  சேகரிக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

  மிக அருமையாகவும் நேர்த்தியகவும்நடை பெற்றகூட்டம். பல அறிவு ஜீவிகள் ஒருங்கிணைந்து இந்த மாபெரும் செயலை செய்து முடிக்க எல்லாம் வல்ல சிவனும், மன்னாதி மன்னரான ராஜராஜசோழனும் உதவி செய்வார்கள்.

  டாக்டர் எல். கைலாசம்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters