So much Importance to Super Star ?
 • யார் இந்த ரஜினி? எதற்கு இந்த மாயை?நாம் தமிழர்கள் தானா?
  Posted by tamil on 1:11 AM in சினிமா, செய்திகள் |

  கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் தமிழ் மக்களிடேயே ஒரே சல சலப்பு, அது என்ன?
  தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலம் சரியில்லை என்ற செய்தி,

  கடந்த 29 ம் தேதி ரானா படபிடிப்பின் பொது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவரை
  இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று பின்னர் இரு நாட்கள்
  வீட்டிற்கு வந்து பிறகு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு போரூர் ஸ்ரீ
  இராமச்சந்திரா மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார், இங்குதான் ஆரம்பித்தது
  புரளிகளும் ஆர்பரிப்பும், ஊடகங்கள் இந்த செய்தியை நாட்டின் மிகபெரிய செய்தியாக
  சித்தரித்தன, எத்தனையோ பெரிய ஊழல் நாடகங்கள் அரங்கேறியே போதும் அதனை விடுத்தது
  ரஜினிக்கு "மலம் சரியாக போகவில்லை, சிறு நீர் கழிக்க முடியவில்லை" என்று நாட்டின்
  மிகபெரிய செய்திகளையே ஊடகங்கள் வெளியிட்டன.

  உண்மையில் ரஜினிக்கு என்ன?

  கடந்த சில மாதங்களாகவே ரஜினி பெரும் குழப்பதிலியே இருந்தார், காரணம் தேர்தல்
  நெருங்கிய சமயத்தில் யாருக்கு வாய்ஸ் கொடுப்பது என்ற பயம் கலந்த குழப்பம், (எப்போது
  அரசியல் தேர்தல் வந்தாலும் இவரது வாய்ஸ் என்ன என்று கேக்க சில புல்லுருவிகள் இவரை
  மொயப்பதுண்டு அல்லது தனது கட்சிக்கு ஆதரவு குரல் குடுக்க சொல்லி அவரை தாஜா
  செய்வதும் அவ்வபோது நடைபெறும்).

  பிறகு அந்த பத்திரிகை ஆசிரியரும் பழைய தமிழ் நகைச்சுவை நடிகரும் அரசியல் ஆலோசகருமான
  அந்த புள்ளி இவரை தேர்தல் முன்பு சந்தித்து என்ன பொடி வைத்தாரோ தெரியவில்லை. பிறகு
  தேர்தல் நாளன்று அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும் வகையில் தான் யாருக்கு ஒட்டு
  அளிக்கிறேன் என்பதை வெட்ட வெளிச்சமாக காண்பித்தது, பிறகு அது போதாது என்று அன்றைய
  அந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் "தமிழகத்தில் தற்போது விவசாயிகள்
  கஷ்டத்தில் உள்ளனர், அதை போக்க வேண்டும்" என்று கூறியது,

  இந்த நிகழ்வுக்கு பின் கலைஞரின் படைப்பான "பொன்னர் சங்கர்" திரைப்படம் பார்க்க
  வைரமுத்துடன் சென்றது, அங்கு கலைஞரின் திரு வாயால் பாராட்டு பெற்றது, இவரை
  பார்த்ததும் கலைஞர் சொன்ன வார்த்தை "என்ன அவங்க கூட சேர்ந்துடீங்க போல" என்ற
  வார்த்தை, மீண்டும் கலைஞர் பக்கத்தில் இருந்த புள்ளியிடம் "இவர் அந்த
  பத்திரிகையாளரின் பேச்சை கேட்டுதான் இப்படி பண்றார்" மேலும் நாம விவசாயிகளுக்கு
  எதுவுமே பண்ணலையாம் ஆட்சியிலே. இப்படி கலைஞர் நொந்து கொள்ள ரஜினி அங்கிருந்து
  நழுவினார்.

  ரஜினியும் திராவிட கழகமும்

  இப்படி பேச ரஜினிக்கு எப்படி யோசனை வந்தது? இவருக்கு சிவாஜி படம் வெளிவருவதில்
  இருந்த சிக்கலை அப்போது ஆட்சியில் இருந்த திராவிட கழகத்தின் உதவியுடன் தான் வெளி
  வந்தது என்று அப்படத்தின் வெள்ளி விழாவில் ரஜினியே தன வாய்பட கூறினார், பிறகு
  அவரின் பிரமாண்ட படமான "எந்திரன்" படத்தையும் தயாரித்து வெளியிட்டது அதே கழக
  நிறுவனம்.

  எல்லா நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழாவிலும் ரஜினி கைகோர்த்து உலா வந்தது
  எல்லோரும் அறிந்ததே, கலைஞருக்கு எந்த விழா என்றாலும் ஓடோடி வந்து அந்த விழாவை
  சிறப்பித்த ரஜினியா இன்று இப்படி நடந்து கொண்டது என்று எல்லோர் மனதிலும் ஒரு ஐயம்.

  ரஜினியும் (பயத்தால்) வந்த நோயும்

  இந்த காட்சிகள் எல்லாம் தேர்தல் நடைபெற்ற வரைதான், தேர்தல் முடிந்து முடிவு வெளியிட
  ஒரு மாத காலம் இருந்த கால அவகாசத்தின் பொது தான் இந்த நோய் படலம் அரங்கேறியது,
  முதலில் அந்த பத்திரிகையாளரும் நடிகரையும் சந்தித்து எதிர்கால அரசியலின் யூகத்தை
  கேட்டு அதிமுக விற்கு வாக்கு அளித்தது, பிறகு தேர்தல் முடிவிற்கு பின்னர் ஊடகங்கள்
  கனித்த தேர்தல் முடிவுகள் அளித்த குழப்பம் ரஜினியை கொஞ்சம் பயத்தில் ஆழ்த்தியது.

  பிறகு ரானா படத்திற்காக எடை குறைத்து, மது, புகையை அறவே தொடுவதில்லை என்று உறுதி
  பூண்டது, இந்த மிகபெரிய வரலாற்று சாதனையை பத்திரிகை ஊடகங்கள் பிரமாண்டமாக செய்தி
  வெளியிட்டது.

  தேர்தல் முடிவு நெருங்க நெருங்க பயமும் கலந்தது அவரிடம் , பிறகு ஆழ்ந்த
  குழப்பத்திற்கிடையே "ரானா" படபிடிப்பில் மயக்கம் அடைந்தார் ரஜினி, பிறகு இசபெல்
  மருத்துவமனயில் சிகிச்சை பிறகு மீண்டும் உடல்நலம் பாதிப்பு கடைசியாக போரூர் ஸ்ரீ
  இராமச்சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு, ஊடகங்களில் கொட்டை
  எழுத்தில் இவரின் நோய் செய்தி, ஒரு வாரத்திற்கு மேலாக இதே நிகழ்வுகள் ஸ்ரீ
  இராமச்சந்திரா மருத்துவ மனையில் அரங்கேறியது.

  பரிசோதித்த மருத்துவர்கள் ரஜினிக்கு கல்லிரல் பாதிப்பு, இதயத்தில் பாதிப்பு,
  நுரையீரல் பாதிப்பு, கால் வீக்கம், அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை என
  அடுக்கு அடுக்காக கூறினர், அனால் அவரது மனைவி மற்றும் மருமகனோ ரஜினிக்கு ஒன்றும்
  இல்லை விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என பரபரப்பு செய்தி வெளியிட்டனர்.

  ரஜினியும் தனி மனித ஒழுக்கமும்

  ரஜினிக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பழக்கங்களும் சிறந்த தெளிவான சிந்தனைகளும்
  இருந்தன, மது அருந்துவது, புகைப்பது போன்ற நல்ல பழக்கங்கள் இருந்தன இதையே தனது
  ஆரம்ப கால படங்களில் செய்து காட்டி சிறந்த ரசிகர்களையும் பெற்று இருந்தார், 2003
  கால கட்டத்தில் அவர் நடித்த பாபா படத்தில் மது சிகரட் பிடிப்பதை எதிர்த்து ஒரு
  அரசியல் புள்ளி மிக தீவிரமாக எதிர்த்தார், பிறகு சொந்தமாக சிந்திக்க தெரியாத சிறந்த
  தெளிவான சிந்தனையை பெற்று இருந்தார், 1980 களில் அப்போது இருந்த அரசியில்
  புள்ளியின் நெருக்கமான நடிகையுடன் பின்னால் சுற்றி பிறகு அந்த பெரும் தலைவரால்
  முதலில் கண்டிகபட்டு, மேலும் அவரது பேச்சை கேளாமல் அந்த நடிகை பின் சுற்றி பின்னர்
  அந்த தலைவரால் அடிவாங்க கூடாத ஒரு உபகரணத்தால் அடி வாங்கி, பிறகு மதியிழந்து மதுரை
  விமான நிலையத்தில் சண்டை போட்டு "மெண்டல்" என்று பெயர் வாங்கியது, அதற்கு காரணம்
  இடைவிடாத படபிடிப்பால் ரஜினிக்கு சற்று மனம் பாதிக்கப்பட்டது என்று வேறு ஒரு
  மறைப்பு செய்தியும் வெளி வந்தது அப்போது. மேலும் எப்பொதும் மது சிகரெட் என்று இளைய
  தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாகவே எப்பொதும் இருந்தார். தான் நடிக்கும்
  திரைப்படங்களில் புகைப்பதை பற்றி சிறப்பு காட்சிகள் வைக்க அவர் தவறுவதில்லை.

  மேலும் அவர் நடித்த பாட்ஷா படத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும் தோணியில் வசனம் பேசி
  தன் படம் ஓட தமிழ் ரசிகர்களை முட்டாள் ஆக்கினார், மேலும் தன் வீட்டில் யார்
  பட்டினியில் கிடந்தாலும் கவலைபடாமல் அவருக்கு பால் அபிஷேகம் செய்யும் தாயுள்ளம்
  கொண்ட ரசிக பெருமக்களையும் நீண்ட காலாமாக ஏமாற்றி வந்தார், இபோதும் அதையே
  செய்கிறார்.

  ரஜினியும் தமிழருக்கான போராட்டமும்

  நடிகர் ரஜினிகாந்த் தமிழருக்காக மிகபெரும் அளவில் போராடி உள்ளார், அதில் சில இதோ,
  நெய்வேலி போராட்டத்தின் போது ஒட்டு மொத்த தமிழ் சினிமா நடிகர்களும் கருப்பு
  உடையணிந்து ஈடுபட்ட போது அதனை இவர் மட்டும் தனி ஆளாக புறக்கணித்தார், (தன்
  படப்பாடல்களில் மட்டும் "தமிழுக்கு ஏன் உயிரை கொடுப்பது முறை அல்லவா" என்று வரி
  மட்டும் உண்டு வைரமுத்துவின் கை வண்ணத்தில்).

  பிறகு ஒக்கேனக்கல் போராட்டத்தில் கலந்து கொண்டு "கயவர்களை அடிக்க வேண்டாமா" என்று
  வீர வசனம் பேசி விட்டு தன் குசேலன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்ற ஒரே
  காரணத்திற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் அந்த
  போராட்டத்தை குழி தோண்டி புதைத்தது, இப்படி ஈழ தமிழருக்காக போராடிய விதமும் உண்டு.

  நாம் தமிழர்கள் தானா? சிந்தியுங்கள்!

  இப்படி பெருமையுள்ள ரஜினி உடல்நலம் பாதிகப்பட்ட இந்நேரத்தில் சிறப்பு பூஜைகள்
  அதுவும் தன்மானம் மிக்க தமிழ் ரசிகர்கள் மற்றும் பெண்கள், அப்படி இவர் என்ன
  செய்தார் தமிழ் நாட்டு மக்களுக்கு பள்ளி, மருத்துவமனை, கல்லூரி அமைத்து கொடுத்தாரா?
  இல்லை "நமது விடுதலை போராட்டத்திற்காக போராடி சிறை தான் சென்றாரா", இல்லை "ஈழ
  தமிழருக்காக போராட்டத்தில் தான் ஈடு பட்டாரா? இல்லை எப்போது எல்லாம் தன் ரசிகர்கள்
  வெகுண்டு எழுந்து கேள்வி கேக்கும் போது எல்லாம் இமயம் சென்று "உயர் ரக புகை" அருந்த
  சென்று விடுவார், என்ன செய்தார் நமக்காக இவரால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை,
  புகையாலும் மதுவாலும் உடலை கெடுத்துக்கொண்ட சாதாரண திரையில் அரிதாரம்
  பூசிக்கொள்ளும் ஒரு நடிகன் ,அவ்வளவு மட்டுமே!

  உங்களது பிரார்த்தனைகளையும் உழைப்புகளையும் நேரத்தையும் போராட்டத்தையும்
  தமிழனுக்காக, தமிழரின் நலன் கருதும் செம்மல் களுக்காக செலவழியுங்கள்,  "தமிழனாக இருக்க ஆசைபடுங்கள் என்றுமே தலை நிமிர்வீர்"

  http://tamilnewsduniya.blogspot.com/2011/05/blog-post_25.html
 • Quite interesting and thought provoking.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters