November monthly lecture invitation
  • Dear friends

    Roja Muthiah Research Library cordially invite you for the monthly lecture.
    Please forward this to your friends.



    *ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை***

    * *



    *இன்மை, சினிமா, எழுத்து** : **பதிவும் கலையும் மற்றும் ஆவணம் என்ற
    சிந்தனையும்***



    *உரையாற்றுபவர்** :** முனைவர். ராஜன் குறை***

    *12 நவம்பர் 2010, மாலை 5.00 மணி***



    *சுருக்கம்***

    * *

    ஆவணம் என்பது பதித்துவைக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு எனலாம். ஒருவர்
    நாற்பதாண்டுகளுக்கு முன்னால் எழுதிய கடிதம் ஒரு ஆவணம். அதிலிருந்து நாம்
    அவரைக்குறித்தும், கடிதம் யாருக்கு எழுதப்பட்டதோ அவரைக்குறித்தும்
    இன்னும் கடிதத்தில்
    குறிப்பிடப்பட்டுள்ள பல விவரங்களைக் குறித்தும் தகவல்களைப் பெறலாம்.



    சினிமாவை குறித்த ஆவணங்களும் ஆவணக் காப்பகமும் நமக்கு சினிமாவையே எப்படி
    ஆவணமாகப் புரிந்துகொள்வது என்பதை உணர்த்துகின்றன. 1935 ஆம் ஆண்டு சினிமா உலகம்
    பத்திரிகையில் எழுதப்பட்ட ஒரு கடிதம், சினிமாவைப் பற்றிய சில முக்கிய
    சிந்தனைகளை எழுப்புகிறது.



    இந்த உரையில் அந்தக் கடிதத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை
    விவாதிக்கும் தருணத்தில்
    திரைப்படம் என்ற ஆவணத்தின் முக்கியத்துவமும், திரைப்படங்கள் குறித்த ஆவணங்களின்
    முக்கியத்துவமும் குறித்தும் கவனம் குவிக்கப்படும்.





    *சொற்பொழிவாளரைப்பற்றி***

    * *

    எண்பத்திரண்டாம் ஆண்டிலிருந்து சிறுபத்திரிகை வெளியில் இயங்கிவரும் ராஜன் குறை,
    திரைப்படச் சங்க இயக்கம், நவீன நாடக இயக்கம், நிறப்பிரிகை பத்திரிகை
    முதலியவற்றுடன் தொடர்பு கொண்டவர். சென்ற ஆண்டு தமிழ் சினிமா குறித்த தன்
    ஆய்வேட்டிற்காக நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில்
    மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். மானுடவியல் மற்றும் ஊடக ஆய்வாளரும்,
    சிந்தனையாளருமான இவரது “முதலீட்டியமும் மானுட அழிவும்” என்ற நூல் புலம்
    வெளியீடாக இந்த ஆண்டு வெளிவந்துள்ளது.







    *இடம்***



    ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

    3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113

    தொலைபேசி: 2254 2551 | 2254 2552

    Website: www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl/.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters