Thirumurai koorum marai, vedam& velvi -8 - some more sangam
  • பதிற்றுப்பத்து - சேர அரசர்களைப் புகழும் சங்க இலக்கியம்.

    இதில்சில பாடல்களைக் காணலாம்.

    பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
    பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்.

    பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம்* கொடுத்து,முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான். குமட்டூர் கண்ணனார்க்கு பிரம்ம தேயம் கொடுத்தது சங்க காலத்திலேயே பிரம்ம தேயம் கொடுக்கும் மரபு இருந்தமையும்,, இப்பாடலைப் பாடிய குமட்டூர் கண்ணனார் போல் அந்தணர் தமிழிலும் தேர்ச்சி பெற்றிருந்தமையும் தெரிகிறது.

    பிரம்ம தேயம் கொடுக்கும் மரபு சிலப்பதிகாரத்திலும் கூறப் படுகிறது.

    நாம் ஏற்க்கனவே கண்ட வார்திகன் கதையிலும், தவறு செய்த பாண்டியன் வார்திகனுக்கு திருத்தங்கல் என்ற ஊரை பிரம்மதேயமாக வழங்கியமை,

    தடம்புனல் கழனித் தன்கால் தன்னுடன்
    மடங்கா விளையுள் வயலூர் நல்கி
    - மதுரைக்காண்டம், கட்டுரைக்காதை - 118 ,119

    என்று குறிப்பிடப்படுகிறது.


    மூ ன் றா ம் ப த் து
    ~~~~~~~~~~~~~~~~~
    பாடப்பட்டோ ன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
    பாடியவர்: பாலைக் கெளதமனார்


    உருகெழு மரபின் கடவுள் பேணியர் 5
    கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
    விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி

    செழுநகர் நடுவண்
    அடுமை எழுந்த *அடுநெய் ஆவுதி*
    இரண்(டு)உடன் கமழும் நாற்றமொடு வானத்து
    நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி

    அந்த நகரத்தில் அடு நெய்ஆஹுதிப்
    புகை பரவியிருக்க

    ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
    ஈதல் ஏற்றல்என்(று) ஆறுபு஡஢ந்(து) ஒழுகும்
    அறம்பு஡஢ அந்தணர் வழிமொழிந்(து) ஒழுகி

    அந்தணர்களின் ஆறு தொழில்களாக - வேதம் ஓதுதல், வேள்வி வேட்டல், அந்த இரண்டையும் பிறர்க்கு செய்தலாகிய ஓதுவித்தல், வேட்டுவித்தல், ஈதல்,ஏற்றல் கூறப்படுகிறது.

    இதையே தொல்காப்பியமும் " அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் " என்று கூறுகிறது.


    ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்வி
    நெடும்பார தாயனார் முந்(து)உறக் காடுபோந்த 10

    இவ்வரசன் தன் குருவாகிய நெடும்பார தாயனார் முதலில் துறவறம் பூண்டு காடு செல்ல, பின் தானும் துறவு பூண்டு காடு சென்றான்.

    பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வெண்டியது கொண்மின்' என்று அரசன் கேட்க, பாலைக் கெளதமனார், "'யானும் என் பார்ப்பனியும் இவ் உடலோடு சுவர்க்கம் புகல் வெண்டும்'என்றார். பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு அரசன் ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப், பத்தாம் பெருவேள்வி முடியும்போது பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். அதாவது உடலோடு சுவர்க்கம் புகுந்தனர்.

    இச்செய்தியை சிலம்பும்
    " வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலர்"

    எனக் குறிப்பிடுகிறது. மதுரைக்காண்டம், கட்டுரைக்காதை - 118 ,119


    ஏ ழா ம் ப த் து
    ~~~~~~~~~~~~~~~
    பாடப்பட்டோ ன்: செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
    பாடியவர்: கபிலர்


    அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
    *உரைசால் வேள்வி* முடித்த கேள்வி
    அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு) 5
    இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
    களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்

    வேள்விகளை முடித்த அந்தணர்களுக்கு, பொன்னால் ஆனா கலங்களால் நீர் வார்த்து தானம் கொடுத்தமையால்
    உன் முற்றம் முழுவதும் சேறாகி யானை நிற்க இயலாதவாறு உள்ளது.

    சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் நான்காவதான : பெரும்பாணாற்றுப்படை
    பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
    பாடப்பட்டவன் :: தொண்டைமான் இளந்திரையன்

    மறையவர் வீட்டுக் கிளிகள் வேதம் ஓதுவதை தேவாரம் மட்டுமல்லாது சங்கமும் கூறுகிறது.

    "வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
    மறைகாப் பாள ருறைபதி"

    மேலும் அந்தணர்களின் வேள்விக்காக நிறுத்தப்படும் யூபச்தம்பமும் குறிப்பிடப்படுகிறது.
    .

    கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
    வேள்வித் தூணத்

    திருமுருகாற்றுப்படை

    மந்திர விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர் வேள்விஓர்க் கும்மே 

    நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
    வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
    ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
    தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
    எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,

    (இந்திரன்)

    அந்தணர்:
    இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
    இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
    அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
    ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

    ( 24 வயது வரை வேதம் படித்த)

    மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
    இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
    ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
    புலராக் காழகம் புலர உடீஇ,
    உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
    ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
    நாஇயல் மருங்கில் நவிலப் பாடி


    அடுத்து பரிபாடல்

    நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே (1)

    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; (2)

    ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
    வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
    நாகம் நாணா, மலை வில்லாக,
    மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய(5)

    ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
    மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
    விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
    புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
    ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என
    அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
    முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, (11)

    தை நீராடல் குறித்த பாடல்.

    ( Dr ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் இது பற்றி தமிழ் ஹிந்துவில் கட்டுரை எழுதியுள்ளார்கள்)

    பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
    நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப (8)


    தமிழின் முற்ப்பட்ட நூல்களாகிய புறநானூறு, தொல்காப்பியம்,பதிற்றுப்பத்துதொடங்கி பிற புறத்திணை நூல்கள், பிற சமய இலக்கியமான சிலம்பு, தமிழின் தலை நூலாம் திருக்குறள் முதலாய அனைத்து நூல்களுமே வேதம், வேள்வி இரண்டுமே தமிழ்ச் சமுதாயத்தில் இரண்டறக் கலந்தவை என்பதையும்,அந்தணர்கள் தமிழர்கள், தமிழில் வல்லமை பெற்று சங்க இலக்கியங்களையும்
    படைத்ததுள்ளார்கள்என்பதையும் தெளிவாகவே குறிப்பிடுகின்றன.

    இதைத் திருமுறைகளும் தொடர்கின்றன.

    இனி இந்த முத்தீ ஒம்புடல், ஐம் பெரும் வேள்வி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

    அதன் முன் சைவம் என்ன கூறுகிறது என்பதை ஒரு சைவ சித்தாந்தியின் வாயால் கேட்போம்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters