கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட தழும்புளவே
கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த, கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில்
You may argue that this reference is general and dose not refer to Kanchi kamakoti
Sambandar answers that - (2-36-4)
நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடியுடன்கூடி
இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன்
சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே. தேன் ததும்புங்கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும் நீங்காத, நீண்ட கரிய கூந்தலையும், வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலைமகளாகிய தேவி. உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய, மேகம் தவழும் பெரிய சோலையை யுடைய, ` கச்சி ` என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க, நீர் சென்று, ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன் ?