பொன்னியின் செல்வன் ஒலிப்பேழை - ஒரு மாபெரும் முயற்சி !
  • தமிழ் மொழியின் மேல் உண்மையில் காதல் கொண்டவர்களால் மறக்கவோ ஒதுக்கவோ முடியாத மாபெரும் சரித்திர நாவல் அமரர் கல்கியின்"பொன்னியின் செல்வன்" என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அமரர் கல்கியின் மேல் உள்ள காதலால் யாஹூ இணைய தளத்தில் உருவாக்கப்பட்டபொன்னியின்செல்வன்குழுவிலும் நாம்இருக்கிறோம்.
    அந்த சரித்திரத்தை ஒலி வடிவத்தில் ஒருநண்பர் மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து வருகிறார். அவர்தான் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் வசிக்கும்ஸ்ரீ ஸ்ரீ என்ற நண்பர். அமரர்கல்கியின் காதலர்களில் அவரும் ஒருவர்!
    பொன்னியின் செல்வன் பற்றி நமக்கு தெரிந்த சில செய்திகள்:இந்த சரித்திரக்கதை கல்கி வார இதழில் 1950 முதல் 1954 வரைதொடர்கதையாக முதல் முதலில் வந்தது. அதனால் கல்கி இதழின் வியாபாரம் பெருகத் தொடங்கியது.  அதற்குப் பின் நான்கு முறை மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் வாசகர்களின் வேண்டுகோளிற்கிணங்க தொடராக வந்தது. எம். ஜி.ஆர் இந்த நாவலைப் படமாக்கும்உரிமையைப் பெற்றார்.
    அவர் அரசியலுக்கு வந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம். ஜி. ஆரிடம் இருந்து அந்த உரிமையைப் பிறகு நடிகர் கமல்ஹாசன் பெற்று படமாக்க முடிவு செய்தார்.  ஆனால் பட்ஜெட் ....? எனவே அந்த எண்ணம் முதல் "மருதநாயக"மாய் விட்டது!
    கலைஞர் அந்த நாவலை அரசு உடமையாக்கினார்! பின்னர் சில குழுக்கள் அந்த உன்னதமான நாவலை தங்களால் இயன்ற அளவு நாடகம் என்ற பெயரில்சிதைத்தன. பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையையோ சின்னதிரையையோ எப்போது காணும் என்று என் போன்ற அமரர் கல்கியின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் போது, பாலைவனத்தில்கண்ட சோலைவனமாக இந்த ஒலிப்பேழை வந்தது. இப்போது வந்திருப்பது முதல்
    பாகம் - புது வெள்ளம் மட்டுமே. பிற பாகங்கள் (மொத்தம் ஐந்து பாகங்கள்!)   இனிமேல் வரும் என்று கேள்வி. அந்த முயற்சி பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்கும் முயற்சி. அவருடைய முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்!

    இதோ அந்த இணைப்பு, நீங்களும் அந்த மாபெரும் சரித்திர நாவலைக் கேட்டு மகிழுங்கள்!

    http://itsdiff.com/kalkips.html

    வாஞ்சி




    Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW! http://downloads.yahoo.com/in/internetexplorer/

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters