1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் : ஜெயங்கொண்டம் அருகே கண்டெடுப்பு
  • News : http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18956

    அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சோழர்கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, மீண்டும் அங்கு புதிய சிவன் கோவில் அமைக்கும் பணியில், ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
    தேவாமங்கலம் கிராமத்தின் வரலாற்று பெருமை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்ற, அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் தியாகராஜன் கூறியதாவது:தேவாமங்கலம் என்றழைக்கப்படும் இவ்வூரின் பழமையான பெயர் தேவன்மங்கலமான பட்டில் என்பதாகும். இவ்வூரின் பிடாரி ஏரிக்கரையில் ஏராளமான முதுமக்கள் தாழி கிடைக்கிறது. இதைக் கொண்டு இவ்வூரில் 2,500 ஆண்டுக்கு முன், பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என தெரியவர

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters