Ponniyin Selvan Varalaatru Peravai

Brief Summary of PSVP meet on 6th Aug 2017

Facebook Event

Youtube Recorded Event

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே…. அதாஹப்பட்து சார்…. சற்றொப்ப 1050 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகள் இன்றளவிலும் தமிழ் பேசும் நல்லுலகில் ஒத்த ரசனாவாதிகளை
ஒருங்கினைத்துக் கட்டிப் போட்டிருக்கிறதென்றால் அது மெடிக்கல் மிராக்கிள் தான் ஜி…!

வருஷா வருஷம் ஆடிப்பெருக்கையொட்டி நமது ‘பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின்’ நடைபெறும் இப்பெருவிழா இந்த ஆண்டு 6 ஆகஸ்ட் 2017 அன்று மயிலையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் நிறுவனர் தலைவர் திரு. சுந்தர் பரத்வாஜ் ( நம்மால் அன்போடு எஸ்பிஎஸ் என்று அழைக்கப்படும்; ‘எஸ்பிஎஸ்’ – சிவபாதசேகரனின் சுருக்கம்) மற்றும் மூத்த நிர்வாகிகளான திரு.ஆர்.வெங்கடேஷ் (அனுஷா வெங்கடேஷ்), திருமதி.ஸ்வேதா ஜீவன், திருமதி.பர்வதவர்தினி, திரு.சதீஷ்குமார் அருணாச்சலம், திரு. திவாகர் வெங்கட்ராமன், திரு.சிவசங்கர் பாபு, திரு.சுந்தர் கிருஷ்ணன், திரு.ஷஷ்வத், இளையதளபதி ராஜா (கிங் !) ஆகியோரின் சீரிய திட்டமிடல், வழிகாட்டுதல், செயலாக்கங்களினால் இப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள், செயல்திட்டங்கள் என்று அனைத்தும் மேற்குறிப்பிட்ட முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் துரிதகதியில் நடந்தன. மிக்குறுகிய கால இடைவெளியில் விழா ஒருங்கமைக்கப்பட்டது.

விழாவுக்கு மிக முக்கிய அம்சமான அரங்கைத் தெரிவு செய்து, அதனை உறுதி செய்த திரு.வெங்கடேஷுக்கு நன்றிகள் பல. அதுமட்டுமன்றி, நமது குழுவின் மிக முக்கிய உறுப்பினரான திருமதி. சுமிதா அவர்களைப் பிரதான விருந்தினராக அழைக்கலாம் என்ற வெங்கடேஷின் யோசனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்து. திருமதி.சுமிதா அவர்கள் பொன்னியின் செல்வனை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் நாடகத்தை வழங்கிய ‘மேஜிக் லாண்டெர்ன்’ குழுவைச் சேர்ந்த திரு.ஹன்ஸ் கௌஷிக் (ஆழ்வார்க்கடியான் வேடம் பூண்ட அந்த நெடிய மெலிந்த உடலமைப்பு கொண்ட முன் குடுமி வேடதாரியே தாங்க..!) அவர்களை மற்றொரு சிறப்பு விருந்தினராக அழைப்பதென்றும் முடிவானது.

சென்னையின் பிரபல ‘மாணவர் நகலகத்தின்’ உரிமையாளர் திரு.சௌரிராஜன் அவர்கள் பொன்னியின் செல்வனை பொம்மலாட்ட வடிவாக உருவாக்கும் முயற்சியில் தொடங்க இருப்பதாகவும் அவரையும் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் என்று முடிவானது.

நிகழ்ச்சி நிரல் முடிவானவுடன் சவாலான பணியென்பது 3 மணி நேரத்திற்குள் அனைத்தையும் எவ்விதம் நேர்த்தியாக நெய்வதென்பதுதான். இதெல்லாம் நமக்கு சகஜம்தானே என்று விழா ஏற்பாடுகளை மும்முரமாக முடுக்கிவிட்டார் இளையதளபதி ராஜா.

இணையம் மூலமாக விழாவை நேரலையாக ஒளிபரப்பும் முயற்சியில் ராஜா அவர்கள், அரங்க நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிகரமாகச் செயலாக்கியதனால் அவரது முதுகில் ஒரு ஷொட்டு.

எல்லாவற்றையும் பின் நின்று இயக்கியது நமது அருமை SPS அவர்களாகத்தான் இருக்கும் என்பதை நேயர்கள் ஊகித்திருப்பீர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

Facebook தளத்தில் Event உருவாக்கப்பட்டு, பொன்னியின் செல்வனின் அனைத்துக் குழுக்களிலும் இது குறித்தும் பகிரப்பட்டு, தொடர்ச்சியாக நினைவூட்டல்களும் Facebook மற்றும் Yahoo groups தளங்களில் தகவல்கள் பரிமாறினோம்.

என்னய்யா இந்தாளு, வழக்கம்போல Prelude லேயே மொக்கை போட்டுனுகிறார். சொம்மா ஹார்ன் அடிக்காத ஷ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வாம்மான்னு நீங்க அங்க கூவறது இங்கன கேக்குது நைனா. இருந்தாலும் எஸ்டிடீ (அதாங்க வரலாறு) முக்கியம்னு நான் சொல்லித்தான் ஒங்களுக்குப் பிரியனும் இருக்கத்தாவலல்ல.

நிற்க, இப்பொழுது நாம் நேரடியாக விழாவிற்குச் செல்வோமா ?

“ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம்பயணிக்குமாறு…..”

திருப்போரூரிலிருந்து 12.45-க்கு கிளம்பி சுட்டெரிக்கும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் பயணித்து, வரும் வழியில் காளத்தி ரோஸ்மில்க்கையும் விடாமல் சுவைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு நான் அரங்கிற்குள் நான் நுழைந்தபோது 1.55 ! உள்ளே நுழைந்ததும் கண்கள் கூசின – வெயிலில் இருந்து மிதமான குளிர், ஒளி சூழ்ந்த அரங்கினுள் நுழைந்தது தான் காரணம்.

அரங்கினுள் வெங்கடேஷ், திவாகர், ஸ்வேதா, பர்வதா, ராஜா, வம்சி, சுந்தர் கிருஷ்ணன், சுமிதா மணிகண்டன், பிரபல வரலாற்று எழுத்தாளர் திரு.உதயணன், ஹன்ஸ் கௌசிக், ராம்குமார் உள்ளிட்ட நம் குழு உறுப்பினர்கள் பலர் அளவளாவிக்கொண்டும், முக்கியமாக செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்/வாட்ஸப்பிக் கொண்டும் பிஸியாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் பெரியண்ணன் எஸ்பிஎஸ் அரங்கினுள் நுழைந்தார். மெல்ல மெல்ல பொன்னியின் செல்வப் பிரியர்களும் அரங்கை ஆக்கிரமிக்க சுமார் 2.15 மணிக்கு, எங்கள் குலமாதா பர்வதாவின் தேவாரப்பாசுரத்துடன் விழா இனிதே தொடங்கியது.

ஸ்வேதாவின் கச்சிதமான வரவேற்புரை முடிந்தவுடன், சுமிதாவை அறிமுகப்படுத்தினார் பர்வதா. (ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்: முதல் நாள் மாலை பர்வதா என்னிடம் அலைபேசியில், ‘சீப் கெஸ்ட்ஸ் இன்டரோ எல்லாம் இங்கிலீஷ்ல இருக்கு சார். மொழிபெயர்த்திருக்கிறேன், சரி பார்த்து சொல்றீங்களா ?’ என்று கேட்டார். ‘சும்மா மணிப்பிரவாள நடையில கேஷுவலா பேசிடுங்க’ என்றேன். அவர் சமாதானமாகவில்லை. ‘அப்ப, மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி, இங்கிலீஷ்/தமிழ் ரெண்டுலயும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பேசிருங்க’ என்றேன். அங்கு அவர் பல்லைக் கடித்தது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கேட்டிருக்கும்னு நெனைக்கிறேன்).

சுமிதா ஜஸ்ட் ஸ்டோல் தி ஷோ. ஷி ஸ்டார்டட் எக்ஸ்ப்ளெயினிங் அபவ்ட் தி சேலஞ்சஸ் ஷி ஃபேஸ்ட் வைல் ட்ரான்ஸ்லேட்டிங் தி எபிக். எஸ்பெஷலி ஆன் தி கீ வர்ட்ஸ் லைக் ‘தம்பி’, ‘அம்மா’ அண்ட் ஆல். ‘தம்பி’ இன் டமிள் இஸ் அ காமன் வேர்ட் ஃபார் எனி பெர்சன் யங்கர் தன் யூ, பட் ஷி செட் ஷி ஹாட் ட்ரமெண்டஸ் ப்ராப்ளம்ஸ் இன் யூஸிங் தட் சேம் வர்ட் இன் டிஃபரண்ட் சிச்சுவஷேன்ஸ். ஸேம் கேஸ் வித் த வர்ட் – அம்மா ஆல்ஸோ.

ஷி வாஸ் ஹைலைட்டிங் அனதர் இம்பார்டண்ட் சேலஞ்ச் ஆன் தி சிச்சுவேஷனல் காமெடி சீன்ஸ், கல்கிஸ் டிபிக்களி ஹ்யூமரஸ் டயலாக்ஸ் அன்ட் ப்ரிங்கிங் அவுட் தி ட்ரான்ஸ்லேட்டட் கண்டெண்ட் வித் த சேம் அமவுண்ட் ஆஃப் நேடிவிட்டி.

பை அண்ட் லார்ஜ், இட் வாஸ் அ ஒண்டர்ஃபுல் டாக் அண்ட் தி ஹோல் ஆடியண்ஸ் என்ஜாய்ட் இட். சுமிதா டெஃப்ட்லி ஹாண்ட்ல்ட் தி வாலி ஆஃப் கொஸ்சன்ஸ் வித் அட்மோஸ்ட் ஈஸ். ஷி ஆல்சோ ரிக்வெஸ்டட் தி மெம்பர்ஸ் டு சப்போர்ட் ஹர் இன் டமிள் ட்ரான்ஸ்லேஷன்ஸ் ஆஃப் தேவார ஸ்லோகன்ஸ் யூஸ்ட் இன் தி நாவல். வெல் டன் சுமிதா அண்ட் பெஸ்ட் ஆஃப் லக்.

தொடர்ந்து, பர்வதா நம் பிரியத்திற்குரிய முன் குடுமி வைஷ்ணவனாக வேடம் தரித்த ஹன்ஸ் கௌஷிக்கை அறிமுகப்படுத்தி அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்தார்.

ஹி ஸ்டாட்ர்ட்டட் ஆஃப் வித் ஹிஸ் எக்ஸ்பீரியண்ஸஸ் ட்யூரிங் 1999 ஈவண்ட் ஆஃப் ட்ராமா பெர்ஃபார்மன்ஸ் பை மேஜிக் லாண்டர்ன். ஹி ஹைலைட்டட் தட் ட்ரிம்மிங் த லெங்க்தி நாவல் இண்டு அ 3 டு 4 ஹவர் ட்ராமா பெர்பார்மன்ஸ் வாஸ் தி பிக்கஸ்ட் சேலஞ்ச் அண்ட் ஜஸ்டிஃபைட் வேரியஸ் காம்ப்ரமைஸஸ் தே ஹாவ் டு மேக்.

சுமிதா தான் இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷனுக்காக இங்கிலீஷ்ல பேசினாங்கன்னா நம்ம ஆழ்வார்க்கடியானும் ஏன் இங்கிலீஷ்லேயே பேசினார்னு புரியல. எனக்கு என்னவோ இங்கிலீஷ் நான் டீடெய்ல் க்ளாஸ்ல உக்காந்திருக்கறா மாதிரியே ஃபீல் (நோட் தி பாயிண்ட், – நான் டீடெய்ல் க்ளாஸ்னு தான் சொல்லிருக்கேன், ஸோ இட் வாஸ் எஞ்சாயபிள், யூ ஸீ !!)

கௌசிக்கை பொன்னியின் செல்வன் படிக்கவேண்டும் என்று வலைவிரித்து, பொறியில் சிக்க வைத்து நம் உறுப்பினர்கள் வாக்குறுதி பெற்ற பின்னரே அவரை மேடையில் இறங்க ஒப்புதல் தந்தனர். அவரும் விரைவில் படிக்கிறேன் என்று ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டார்.

அடுத்து, நம் தல இறங்கி அடித்தார். அதாங்க வெங்கடேஷின் ‘கல்கி’ குறித்தான உரை. 46 பந்துல 102 ரன் அடிக்கனும்னு யாரோ தோனிட்ட சொன்னா மாதிரி, சும்மா மின்னல் வேகத்தில் கல்கியின் வாழ்க்கையை விவரித்தார். ‘ரீவைண்ட்’ பட்டனைப் பிரஸ் பண்ணி 9-9-1899 (கல்கி பிறந்த நாளுக்கு) அழைத்துச் சென்ற வெங்கடேஷ், அடுத்து ‘ப்ளே’ பட்டனை பிரஸ் பண்ணுவார்னு நெனச்ச எல்லாருக்கும் ஷாக். அவர் ‘ப்ளே’ மற்றும் ‘ஃபாஸ்ட் ஃபார்வர்ட்’ என்று ரெண்டு பட்டனையும் சேர்ந்து அமுக்கி ஒரு தூக்கு தூக்கி டேக் ஆஃப் ஆனார். அடுத்து முக்கால் மணி நேரம் கல்கி வாழ்க்கையின் பல முக்கிய சம்பவங்களை ‘கட் பண்றோம்; இந்த சீன்’ ரேஞ்ச்சுக்கு கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி அசத்திட்டார் மனுஷன். ஹேட்ஸ் ஆஃப் சார் !
ஆனாலும், கோதை அவர்கள் வெங்கடேஷை பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தார். இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி ரேஞ்சில் உரையாடியது கிளைக்கதை !

அடுத்து, மாணவர் நகலகத்தின் திரு.சௌரிராஜன், பொன்னியின் செல்வனை பொம்மலாட்ட வடிவில் கொண்டு வர இருக்கும் தனது முயற்சிகள் குறித்தும், சவால்கள் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டு, நம் குழுவின் ஒத்துழைப்பு, ஆதரவு ஆகியவை வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பொன்னியின் செல்வனை ஏதோவொரு வடிவில் கொண்டு வரவேண்டுமெனில் standardization – அதாவது ஒவ்வொருவருக்கும் பொன்னியின் செல்வன் குறித்து இருக்கும் கற்பனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தளத்திற்குக் கொண்டு வந்து பெஞ்ச்மார்க் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி, அவ்விதம் செய்யப்படும் வடிவத்தை இக்குழுவினர் சரிபார்த்து ஒப்புதல் வழங்கினாலே அந்த வடிவம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக அவர் தெரிவித்ததும் பலத்த கரகோஷம். பின்னே, நமக்கு நாமே பாராட்டிக்கணும் இல்லையா ?

விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொண்டு, தாங்கள் எவ்விதம் பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டோம், எப்படி குழுவில்இணந்தோம் என்று பகிர்ந்து கொள்ளும் வழக்கமான நிகழ்ச்சி நேரமின்மை காரணமாக இந்த ஆண்டும் முழுமையாக நடத்த முடியாமை குறித்த வருத்தங்கள் இருந்தாலும், தொடர்ந்து சந்திப்பது என்ற உத்வேகம் அனைவர் மனதிலும் எழுந்தது.

எனக்கு நினைவில் இருந்தவரை விழாவுக்கு வந்த நம் உறுப்பினர்கள் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். விடுபட்டோர் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.

(பிரபல வரலாற்று எழுத்தாளரும் வரலாற்று வேங்கையுமான நமது அன்புக்குரிய திரு.லக்ஷ்மன் கைலாசம் ஐயா அவர்கள், சிவசங்கர் பாபு, ராம்னாத், சங்கர் நாராயண், வேலுதரன், ஆண்டவர் கனி, கார்த்திகேயன், சிவக்குமார் ஷன்முகசுந்தரம், சண்முகானந்த், கலைச்செல்வன் மற்றும் பலர்)

நன்றியுரையைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

மீண்டும் ஒரு அற்புதமான தருணத்தில் அனைவரும் சந்திப்போம்..!!
பொன்னியின் செல்வன் ராஜராஜன் புகழ் ஓங்குக..!! சோழம்… !!! சோழம்..!!!

__________

Regards

B Muruganantham

Exit mobile version