36வது புத்தகக் காட்சி – ஒரு பார்வை
இந்த வருட (2013) புத்தகக் காட்சி
வழக்கம்போல் நிறைய கூட்டம், நந்தனம் YMCA பெரிய இடம் என்பதால் சிரமம் அவ்வளவாக இல்லை.
முந்தய வருடங்கள் போல் பாரதி கவிதைகள், காந்தியின் புத்தகங்கள், சிறுவர்கள் புத்தகங்கள் குறிப்பாக பொன்னியின் செல்வன் புத்தகங்கள் எல்லா கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்ற வருட விகடன் பதிப்பு, மலிவு விலை, ஒரே தொகுதியாக பதிப்பு என நிறைய வகை.
இந்த வருட புது வரவு, சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் ஒவியர் பத்மவாசனுடைய ஒவியங்களுடன் பொன்னியின் செல்வன் பதிப்பிக்கிறது. பொங்கல் அன்று (14 அன்று) வெளியிடப்படுகிறது.
தென்னாட்டுச் செல்வங்கள் – இறையருள் ஓவியர் சில்பி – விகடன் பதிப்பு நன்றாக விற்பனையாகிறது.
புத்தகக் காட்சி விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.