PS MEET on 5th August - Sunday 3-7 PM - Programme
  • THANK YOU SATISH ONCE AGAIN.
  • நண்பர்களே,

    இன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரையில் பொன்னியில் செல்வன் வரலாற்றுப் பேரவையின் சார்பில் பத்தாம் ஆண்டுக் கூட்டம் தி.நகர் அறுசுவை அரங்கில் இனிதே நடந்தேறியது.

    பேரவைத் தலைவர் எஸ்பிஎஸ் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. சுந்தர் பரத்வாஜ் மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச்செய்திருந்தார். பக்திப்பாடலை திரு.சந்திரசேகர் பாட விழா தொடங்கியது. பின்னர் உறுப்பினர்களின் சிறு அறிமுகப்படலம். திரு.வெங்கடேஷ் (அனுஷா வெங்கடேஷ்) இன்றைய எழுத்தாளர்கள் நிலைமை குறித்து ரத்தினச்சுருக்கமாக விவரித்தார். எழுத்தை முழு நேரத் தொழிலாக
    ஏன் இன்றைய இளம் தலைமுறை ஏற்க முடியாது என்பது குறித்தும், எழுத்தாளர்களின் உழைப்பைச்சுரண்டும் பதிப்பகத்தார் மற்றும் இணையத்தில் உலவும் பைரஸி குறித்தும் தனது கருத்துக்களை மிக வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து திரு.அர்விந்த் வெங்கட்ராம், வெண்கலச்சிலைகள் குறித்து மிக அருமையான பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷனை வழங்கினர். பல நுணுக்கமான தகவல்கள் அடங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பல சந்தேகங்களுக்கு அர்விந்த் அளித்த பதில்கள் அவரது ஆழ்ந்த தேர்ச்சியை வெளிப்படுத்தியது.

    பிறகு, திரு.ரவி வேணுகோபால் தன்னுடைய I,Rama Krishnan Kஎன்ற நூலின் இரண்டாம் பாகத்திற்கான் விடியோ ட்ரெயிலரை வெளியிட்டார். தொடர்ந்து திரு.பாலாஜி/திரு.பரத் ஆகியோர் இணைந்து வழங்க இருக்கும் 'பொன்னியின் செல்வனின்' ஒலிப்படம் குறித்து தங்கள் முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டு, பேரவை உறுப்பினர்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் நல்கினர்.

    விழாவிற்கு வருகை தந்து தனது நூலின் பிரதிகளைப் பரிசாக வழங்கி, தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திரு.டி.கே.வி. ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

    பேரவையைச்சார்ந்த எழுத்தாள உறுப்பினர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தி நினைவுப்பரிசாக டி.கே.வி.ராஜனின் நூல்கள் வழங்கப்பட்டன.

    சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடல் நடந்தேறியது. பேரவை உறுப்பினர்கள் தங்கள் நூல்களைக் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    திரு.ரவி வேணுகோபால், தான் ஏன் ராமாயணம் எழுதத் தேர்ந்தெடுத்தேன், விஸ்வாமித்திரரை ஏன் ராமர் குருவாகத் தேர்ந்தெடுத்தார், கைகேயியின் உண்மையான கதாபாத்திரத் தன்மை என்ன என்பது குறித்து மிக அழகாக விளக்கினார். குறிப்பாக, சீதையின் உண்மையான குணாதிசயத்தை அறிந்து கொள்ளும் கணமே ராமாயணத்தை உணரும் தருணம் என்று குறிப்பிட்டது அருமை.

    தொடர்ந்து, திரு. கோகுலின் சேரர் கோட்டை நாவலைப் பற்றியும், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' என்ற சொற்பிரயோகம் குறித்தும் திரு.எஸ்பிஎஸ் நீண்ட விளக்கம் அளித்தது அற்புதம்.

    விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் பட்டியல் இதோ:

    1. SPS (a) Sundar Bharathwaj
    2.Satish Kumar Arunachalam
    3. Venkatesh ramakrishnan
    4.Swetha Jeevan
    5. Sivaram Kannan
    6.Ravi Venugopal
    7. Kothai Venkatesh
    8. Arvind Venkatraman
    9. Sankaranarayanan KS
    10 SaravanaKumarK
    11. Saravanan AP
    12: Sivasankar Babu
    13: Sanakaranarayanan
    14. Krupashankar
    15. J.Ramki
    16. Chandrasekharan :: VAAZHTHU
    17. RamnathMani* his wife
    18. Thiirumalai veerasamy
    19. S. Karthik
    20. Dr.Laxman Kailasam
    21. Mr.Balaji
    22. Mr.Bharath
    23. Mr.Natarajan
    24. Mr.Raaman
    25. Muruganantham Balakrishnan

    Sorry, if i have missed out any names...please share your views on the event..


    Event ended with Chitrannam... Kalkandu saadham, thengai sadham, sambar sadham, urulaikkizhhagu varuval, thayir sadham, oorugai...
  • Glad to hear the meeting went well. I couldn't turn up as there was a last minute visitor at home & I couldn't avoid that. I will participate in the next event.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters