மணிரத்னத்தின் காவியப் படம்!
  • செய்தி முழுவதும் உண்மைய என்பது தெரியவில்லை..
    ஒரு வலைத்தளத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    மணிரத்னத்தின் காவியப் படம்! (Mani Rathnam plans to screen the famous tamil novel Ponniyin Selvan)

    மணிரத்னத்தை விட அதிக விருதுகளைப் பெற்று, உலக அளவில் பிரசித்தி பெற்றவர் எவரும் உண்டோ? ஏ.ஆர்.ரஹ்மானை வேண்டுமானால் குறிப்பிடலாம். ஆனால் ரஹ்மானின் குருவும் மணிரத்னமே! அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான புகழ்பெற்ற வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்', தமிழ் இலக்கியத்தின் தலைமை நாவலாக கருதப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலை வைத்து, 80-120 காட்சிகள் கொண்ட
    திரைக்கதையை மணிரத்னம் முன்பே உருவாக்கிவிட்டாராம். அப்பணியில் அவருக்குத் துணையாக நின்றது யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? நல்லது! அது எழுத்தாளர் சுஜாதாவே! வசனம், திரைக்கதை என பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னத்தோடு இணைந்து உருகொடுத்திருக்கிறார் சுஜாதா! 'எந்திரன்' ஷங்கரின் கனவுப்படம் என்றால், 'பொன்னியின் செல்வன்' மணிரத்னத்தின் காவியம். இருப்பினும்
    பட்ஜெட் மிக அதிகமாக தேவைப்படும் என்பதால், அப்போதைக்கு மணிரத்னம் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டார். மணிரத்னமும், சுஜாதாவும் தாங்கள் உருவாக்கியதைப் பிறகு உபயோகப்படுத்துவோம் என நிலுவையில் வைத்து விட்டனர். பொன்னியின் செல்வனின் 5 பாகங்களையும் இவர்கள் தங்கள் திரைக்கதையில் அடக்கி விட்டனர். இந்த நாவல் மட்டும் திரைப்படமாக உருவாகிவிட்டால், மொத்தத் தமிழ்
    ஆர்வலர்களுக்கும் அது மிகப்பெரிய விருந்தாக அமையும். இக்கதையின் நாயகனான 'வந்தியத்தேவன்' கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவே மணிரத்னம் விரும்பினார், இருப்பினும் தற்பொழுது விக்ரம் நன்கு பக்குவப்பட்டு விட்டதால், விக்ரம் அவ்வேடத்திற்கு சிறப்பாக பொருந்துவார் எனக் கருதப்படுகிறது. இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில்
    மகேஷ் பாபு நாயகனாகவுள்ளார். பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளரான ஜெயமோகன், சுஜாதா விட்டுப்போன இடத்திலிருந்து வசனங்களை எழுதவுள்ளார். இதற்காக இவருக்கு 2 கோடி சம்பளமாக தரப்படவுள்ளது. எழுத்தாளர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 'பழசிராஜா' படத்திற்காக, மலையாள எழுத்தாளரான ஆவு வாசுதேவனுக்கு இது போன்ற பெரிய
    தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எல்லாம் சரிதான், இவ்வளவு பெரிய படத்திற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள்? இப்படத்தைத் தயாரிக்கும் திறன் தமிழ்நாட்டில் எந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இருக்கிறது? உங்கள் யூகம் சரி தான். அஸ்தமனம் இல்லாத 'சூர்யனே' இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன்
    வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எந்திரன்' மூலம் 318 கோடி லாபம் பார்த்த பிறகு, அதைவிட குறைந்த லாபத்தினைப் பெற சன் பிக்சர்ஸூக்கு விருப்பமில்லை போல. இந்தியாவின் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே வழக்கம் போல இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். பல பாலிவுட் நாயகிகள் இது போன்ற பெரியதோர் படத்தின் ஒரு காட்சியிலாவது தோன்றிவிட ஆவலுடன்
    காத்திருக்கின்றனர். இது போன்ற சிறந்த படம் நாம் நினைத்தபடி உருவானால் எப்படி இருக்கும் என சற்றே கற்பனை செய்து பாருங்கள்? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' இந்தியாவின் மிகப்பெரிய, சிறந்த, பிரம்மாண்ட படமாக அமையும். பற்பல ஆஸ்கர் விருதுகளை இப்படம் வென்றாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை! அத்தகைய திறமையும், வளமும் நமக்கு மிக
    அதிகமாகவே இருக்கிறது. இத்தகைய படம் உருவானால், அதனை உருவாக்கியவர்களுக்கு இந்திய திரைத்துறை மிகவும் கடமைபட்டிருக்கும்! இதுபோன்ற பெரியதோர் கனவுப்படம் தமிழ் திரைத்துறையை அலங்கரிக்கும் என நாம் உறுதியாக நம்பி, வரவேற்போம்! அப்டிபோடு! தமிழ் காவியங்கள் உலகத் திரைகள பாக்கப்போகுதாக்கும்....!


    http://www.koodal.com/tamil/movies/hotnews/5451/mani-rathnam-plans-to-screen-the-famous-tamil-novel-ponniyin-selvan

    -
    அறிவரசு
  • Dear,

    What novel filmed is in perfect shape as written by authors?

    Cinima walas modify the script according to their taste and latest trend by considering their business.

    Hence ponniyin selvan could be modified according to the present situation,

    Another important aspect is that , the basic human behaviour never be changed.

    Why ramayana and mahabharata till today accepted by almost all. Even we could see raman,ravanan, inour present life.

    I am able to visualise the behaviour of arulmozhi, vandthiyadevan, nandini in our life too.

    I hopePS could be converted to best movie by the cini people by considering the present day context

    Sridhar dear, why dont try to basic cini script of ponniyin selvan with the present day context?

    Any members may make an attempt in this regard
  • i will be happy if the film creates an awareness and our temples are saved from the "Thiruppanik Kuzhus"


    regads

    sankar
  • I read in Tamil weekly today that this movie will be the " modern version" of Ponniyinselvan novel.

    Trust Vandiyathevan dosenot end up marrying Nandhini i =n the modern version.
  • Dear Sankar,
    Don't get surprised if such things happen in tamil movies and especially in Manirathnam's movie. My personal request to all members is not to see this movie when it is released so that our imagination about the immortal characters with whom we have been living since our childhood do not get erased.
    This is my first letter to our members and I wish everyone the Best Wishes and Season's Greetings.
  • Best adaptation of a book I've ever seen was 'To Kill a Mockingbird'
    as good as, or almost better than, the book.
  • Rowling's Harry Potter novel, the first six parts were already released and
    the seventh part is to be released split into two.Likewise Ponniyin Selvan could
    be filmed part by part and the last one split into two.Only big producers like
    sun pictures and directors like shankar or manirathnam could venture in a period
    film like PS. Only then Kalki's originality could be translated and justified
    without any distortion.The script may be perused by historic novel authors and
    staunch followers of PS and approved for filming.It will be extreamely difficult
    to contain PS within three hours.
    The other option is to serialise into episodes and shown in TV like Ramayana
    and Mahabaratha .
    If manirathnam goes for the modern version of PS like his Thalapathi and
    Ravanan and Selvaragavan's Aayirathil Oruvan then we need not discuss PS at all.
    somasundaram

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters