Vannthiyath thaevan: Avan oru kathanayagan
  • அன்பு பொன்னியின் செல்வன் இரசிகர்களுக்கு வணக்கம்.

    நான் எழுதிய "வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்" என்ற கட்டுரை திண்ணை வார இதழில் வெளியாகி உள்ளது.
    பார்க்க >> http://puthu.thinnai.com/?p=17994
    படித்து உங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
    நன்றி.

    அன்புடன்.
    ..... தேமொழி
  • அன்புள்ள தேன்மொழி அவர்களுக்கு :

    அமரர் கல்கியே இத்தகையகதைச்சுருக்கத்தைக் கொடுக்காத நிலையில் இப்படி ஒன்றா ?
    பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கத்தை ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப்
    போல் மிக அழகாக வடித்திருக்கிறீர்கள்.  சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும் - மணிமேகலையைப்
    பற்றிச் சொன்ன நீங்கள் எப்படிவானதியை மறந்து விட்டீர்கள் ? அதே போல், "கந்தமாறனின்
    கொலைப்பழி" என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே!  உங்கள் திரைக்கதையில் இவற்றையும்
    இணைத்துக்கொண்டால் இந்தக் கதைச்சுருக்கம் இன்னும் அற்புதமாக இருக்கும் !

    உங்கள் சீரிய செயலுக்குவாழ்த்துக்கள் !

    வீகோபால்ஜி



    >________________________________
  • தங்கை தேமொழி,மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். புகழ் பெற்ற எந்த கதைகளுக்கும் தாங்கள் சொல்லும் நியதி பொருந்தத்தான் செய்கிறது. அல்லது தாங்கள் சொன்ன நியதியின் படி எழுதாத கதை புகழ்பெறாது.
    என்னுடைய மணிமகுடத்தின் கதையும்,மலர்ச்சோலை மங்கை மற்றும் கயலியன் கதையும் தற்பொழுது முடியும் தருவாயில் இருக்கும் முத்துசசிப்பியின் கதையும், தாங்கள் சொல்லும் நியதிக்கு கிட்டத்தட்ட பொருந்தத்தான் செய்கிறது. எனது புதினங்கள் நன்றாக விற்பதற்கு எனது கதைகள் தாங்கள் சொன்ன நியதியில் அமைந்த காரணம் தான் போலும்.
    தாங்கள் சொல்லும் நியதிக்கு பொருந்தாமல் புகழ் பெற்ற கதைகள் ஏதேனும் உண்டோ? மரியாதைக்குரிய படித்த பொன்னியின் செல்வனின் அன்பர்கள் சொன்னால் அது பற்றியும் ஆராயலாம்..
    அன்புத் தங்கை தேமோழி மிக அருமையாக வழி காட்டலுக்கு நனறி.
    அன்புடன்டாக்டர் எல். கைலாசம்
  • கட்டுரையைப் படித்து தங்களது கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டK.S. Sankaranarayanan, வீகோபால்ஜி, டாக்டர் எல். கைலாசம், Janani, பர்வத வர்தினி, Raja, வளவன் ஆகியோருக்கு என் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்
    ..... தேமொழி

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters