"Software Freedom Day" - Sept 15, 2012. to Sept 22, 2012. at Chennai
  • .............................MAIL AS RECEIVED................



    வணக்கம்,



    கணியத்தின் சார்பில் அனைவரையும் “மென்பொருள் விடுதலை நாள்” (Software Freedom Day) கொண்டாட்டத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.



    “மென்பொருள் விடுதலை நாள்” என்பது கட்டற்ற மென்பொருளைக் கொண்டாட உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வு. கட்டற்ற மென்பொருளையும் அதன் கோட்பாடுகளையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், அதனைப் பயன்படுத்துவதோடு பங்களிக்கவும் ஊக்குவித்தல் ஆகிய குறிக்கோள்களை அடையும் வண்ணம் கட்டற்ற மென்பொருட்களை மக்களின் அன்றாட வாழ்வில் அறிமுகப்படுத்தும் முயற்சி இது.



    இவ்வாண்டு ஒரு வாரம் முழுதும் இதனைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடக்கம் செப்டம்பர் 15 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெறும். அதன்பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) வளாகத்தில் செப்டம்பர் 22-ம் தேதி நிறைவுபெறுகிறது.



    கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம், அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில் FSFTN மற்றும் ILUGC தன்னார்வலர்களும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களைச் செயல்முறையோடு விளக்குவார்கள். அன்றாடம் பயன்படுத்தும் ஆஃபிஸ், இமேஜ் எடிட்டிங் கருவிகள், ஆடியோ/வீடியோ எடிட்டிங் கருவிகள், விளையாட்டுகள், PHP, பைத்தான் போன்ற நிரலாக்க மொழிகள், துருபல், ஜூம்லா உள்ளிட்ட இணையதள வடிவமைப்பு மென்பொருட்கள், லினக்ஸ் நிறுவும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கங்கள் பெறலாம்.



    இடம்பெறவுள்ள அனைத்துத் தலைப்புகளின் பட்டியலைக் காண; http://wiki.ilugc.in/index.php?title=Sfd2012



    கட்டற்ற மென்பொருள் சார்ந்த தரமிக்க ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் வெளிக்கொணரும் நோக்கில் கணியம் மாத இதழின் சார்பில் ஒரு கட்டுரைப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் விவரங்கள் http://www.kaniyam.com/essay-competition பக்கத்தில் உள்ளன.



    இதனைத் தங்கள் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் தெரிவித்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



    கட்டற்ற மென்பொருளையும் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களையும் கண்டறிய செப்டம்பர் 15, 2012. (சனிக்கிழமை)





    இடம்: டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 106

    நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை

    தொடர்புக்கு: ஶ்ரீனிவாசன் (9841795468), அருண் (9488000707)



    மேலும் விவரங்களுக்கு http://www.kaniyam.com/software-freedom-day/

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters