அக்ஷர ராமாயணம் !
 •   ராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
    வடிவமைக்கப் பட்டுள்ளது.

  >>
  >>
  >>>>
  >>>>
  >>>>
  >>>>
  >>>>ராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
  >>>>வடிவமைக்கப் பட்டுள்ளது.
  >>>>
  >>>>அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும்
  >>>>அவதரித்ததாக அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு
  >>>>அல்லவா அனுமன் ?அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவணைத்து
  >>>>அருளும் அருட் செல்வன்!
  >>>>
  >>>>அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை
  >>>>அடக்கி,அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .
  >>>>
  >>>>அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே!
  >>>>அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
  >>>>அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.
  >>>>அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால்
  >>>>அறிவிழந்து அபலையை அபகரித்தான்
  >>>>
  >>>>அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை.
  >>>>அயோத்தி அண்ணல் , அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து ,
  >>>>அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.அந்த அடியார்களில் அருகதையுள்ள
  >>>>அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.அடுத்து அன்னைக்காக
  >>>>அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
  >>>>
  >>>>அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை
  >>>>அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
  >>>>அளித்தான்அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான்அனுமன். அடுத்து,அரக்கர்களை அலறடித்து ,அவர்களின் அரண்களை ,அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் ,
  >>>>அசாத்தியமான அதிசாகசம்.
  >>>>
  >>>>அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையை அமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை
  >>>>அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த
  >>>>அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன்
  >>>>அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் .
  >>>>அனந்த ராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.
  >>>>
  >>>>
  >>>>
  >>>>
  >>>>__._,_.__  -

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters