Tamil Heritage Program: Irrigation in Pudukkottai epigraphs, Saturday, April 7th, 2012, 5:30 pm, Tha
  • தமிழ் பாரம்பரியம்

    (Tamil Heritage Trust)

    presents

    *புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் நீர்ப்பாசனம்* (*Irrigation in Pudukkottai
    epigraphs)*
    **

    by *கரு. இராசேந்திரன்* (*Karu. Rajendran)*

    at 5.30pm on April, 7th, 2012

    at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
    *
    Speaker and Topic:*

    புதுக்கோட்டையைச் சேர்ந்த கரு. இராசேந்திரன் தானாகவே கல்வெட்டுகளைப் படிக்கத்
    தெரிந்துகொண்டார். புதுக்கோட்டைப் பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகள்
    படியெடுக்கப்பட்டு புத்தகமாக ஆக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் இருந்தது. ஆனால்
    அதில் குறிப்பிடப்படாத பல கல்வெட்டுகளை இராசேந்திரன் கண்டறிய ஆரம்பித்தார்.
    அப்படியாகத்தான் அவர் பாசனக் குளங்களில் உள்ள மடைத் தூண்களில் வெட்டப்பட்டுள்ள
    கல்வெட்டுகளைக் கண்டறிந்தார்.

    இப்படியாகத்தான் கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் பாசனக் கல்வெட்டுகள் நோக்கித்
    தம் கவனத்தைத் திருப்பினர். இதில் முன்னோடி கரு. இராசேந்திரன்தான். இப்படி
    இதுவரையில் கண்டறியப்பட்டிருக்கும் சுமார் 150 கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு
    பங்கைக் கண்டுபிடித்த பெருமை இவருடையதே.

    குளங்கள், ஏரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பெயர்கள், அவற்றை வெட்டுவித்தோரின்
    பெயர், அவை வெட்டுவிக்கப்பட்ட காலம், அப்போது ஆட்சி செய்த மன்னர் பெயர் ஆகியவை
    மட்டுமின்றி, நீர்ப் பங்கீட்டு முறை எப்படி இருந்தது, குளங்களைப் பராமரிக்க
    யாரெல்லாம் நிதி அளித்தனர் போன்ற பலவும் இந்தக் கல்வெட்டுகளிலிருந்து தெரிய
    வருகின்றன.

    அசோகர் குளத்தை வெட்டினார், சாலைகளைக் கட்டினார் என்றெல்லாம் பள்ளிப்
    புத்தகங்களில் படிக்கிறோம். ஆனால் அவை குறித்து ஏதேனும் கல்வெட்டுகள் உள்ளனவா
    என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய முதலாம் இராஜராஜன்,
    பல குளங்களைக் கட்டி, சீரமைத்து, வாய்க்கால்கள் பல வெட்டி, நீர்ப்பாசனத்தைப்
    பெருக்கினான் என்றும், அதனால் வேளாண்மை விரிவாக்கப்பட்டது என்றும் சித்தூரில்
    உள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    நம் மன்னர்கள் கோவில்களைக் கட்டி மதத்தைப் பரப்புவதோடு நிற்கவில்லை. அவற்றைத்
    தாண்டி, மக்கள் வளமாக வாழ என்னவெல்லாம் செய்துள்ளனர் என்பதற்கான முதன்மைச்
    சான்று இந்தக் கல்வெட்டுகள். இவை குறித்து கரு. இராசேந்திரன் விரிவாகப்
    பேசுவார்.

    *RSVP:*

    A. Annamalai: Gandhi Study Centre - [email protected]; 94441-83198

    Badri Seshadri: Kizhakku-p-padippakam - [email protected]; 98840-66566

    S. Kannan: Bank of Baroda - 2498 5836

    S. Swaminathan - [email protected]; 2467 1501

    R. Gopu, [email protected], 98417-24641

    T. Sivasubramanian, [email protected], 98842-94494

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters