மாலைப்பொழுதின் மயக்கத்திலே !
  • WHEN YOU KEEP ON WORKING ON A PROJECT, YOU NEED A STABLISER TO REJENUVATE YOUR

    MIND FROM THE CORES .... HERE IT IS .....! THOUGH IT IS NOT RELEVANT I TRUST OUR FRIENDS
    WOULD DEFINITELY ENJOY THIS !


    மாலைப்பொழுதின் மயக்கத்திலே.......

    பருவகாலத்தின் பாதை வசந்தங்கள்.. அறிந்தும் அறியாமலும் என்கிற

    வயதைக் கடந்து வரும்போது ஏற்படும் உணர்வுகளும்

    உள்ளம்படும் பாதிப்புகளும் எண்ணிலடங்கா. எதையோ

    தேடி அலையும் வயதை என்னவென்று சொல்வது? இலக்குகள்

    தெரிவது போலிருக்கும்.. ஆனால் பார்வையில் தெளிவிருக்காது.

    இன்பத்தின் எல்லைகளை இருகரம் கொண்டு அழைப்பது போலிருக்கும்.

    தவிப்பின் விளிம்பில் நின்றுகொண்டு எடுக்கும் முடிவுகள் தப்பாகப்

    போவதில் வியப்பில்லை. காலம் தந்திருக்கும் இந்தத் தேர்வுகளைக்

    கடந்திடாமல் செல்ல எந்த மனதிற்கும் அனுமதியில்லை.

    அனுபவம் பாடம் சொல்லித்தர ஆரம்பிப்பது இங்கே என்று கூடச் சொல்லலாம்.

    இளமைக் காலம் இனியதுதான்..
    பெண்ணுக்கு - பருவம் வந்த நாள் முதலாய் பார்வை, நடை, உடை,

    பாவனை எல்லாம் புதிதாய் வந்து சேருகின்றன. அணிகின்ற

    உடையன்றி அச்சம் மனதிலும் நாணம் முகத்திலும்

    குடியேறுகின்றன. பெண்மை அங்கே துலங்குகிறது.

    ஆணிடம் - இந்த அடையாளங்கள் அதிகமில்லையென்றாலும்

    மீசை அரும்புகிறது. குரல் கரகரக்கிறது. மழலைத் தன்மை

    விடைபெறுகிறது. வலிமை வந்தடைகிறது. வாலிபம் என்றே

    சொல்கிறது.

    ஒன்றின்மேல் ஒன்றுக்கு ஈர்ப்பு உலக இயற்கையாய்

    உந்தப்படுகிறது. நடைமுறை வாழ்க்கையில் நடப்பது என்ன?

    வாழ்வின் தடங்கள் எல்லாம் வசந்தங்களை நோக்கி மட்டும்

    நடப்பதில்லையே. எண்ணிய வண்ணம் எவருக்கும் வாழ்க்கை

    வாய்த்துவிடுவதுமில்லையே..

    வெற்றி என்பது எல்லா திசைகளிலிருந்தும் ஓடிவரும் நதியல்ல..

    நாம்தான் திசைகளைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது.

    வழிதனில் தோல்வியையும் சந்திக்கத்தான் நேரிடுகிறது.

    தளர்ந்துபோகாமல் தொடர்ந்து போகிறோமா என்பதே கேள்வி.

    பெண்ணொருத்தி.. இந்த வாழ்க்கைப் புயலில்தான் சந்தித்த

    சோதனைகளை உளம் உருகப் பாடுகிறாள் கேளுங்கள்..

    வரிகள் பிறந்தன கண்ணதாசனிடம்.. இசையும் பிறந்தது

    விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம்.. குரலும் பிறந்தது பி.சுசீலாவிடம்!
    பாக்கியலட்சுமி திரைப்படத்திற்காக கனிந்த இந்தப் பாடல்..

    கதை சொல்கிறதா? கவிதை என்கிறதா? புரியாத புதிர்போல

    இருக்கும் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறதா?

    திரைப்பாடல் காட்சியில் கையில் வீணையோடு காட்சி

    தருகிறார் அழகிய ஈ.வி.சரோஜா அவர்கள். பாடலின் சோகம்

    ஒருபுறம்சௌகார் ஜானகியின் முகத்தில். ...ததும்ப..... இசையில்

    நம்.... .இதயம் மயங்க..........இதோ .........

    மாலைப்பொழுதின் மயக்கத்திலே........

    இன்பம் சிலநாள்துன்பம்சிலநாள்
    என்றவர்யார்தோழி
    இன்பம்கனவில்துன்பம்எதிரில்
    காண்பதுஏன்தோழி

    வழிமறந்தேனோவந்தவர்நெஞ்சில்
    சாய்ந்துவிட்டேன்தோழி
    அவர்மறவேன்மறவேன்என்றார்உடனே
    மறந்துவிட்டார்தோழி

    கனவில்வந்தவர்யாரெனக்கேட்டேன்
    கணவர்என்றார்தோழி
    கணவர்என்றால் - அவர்
    கனவுமுடிந்ததும்
    பிரிந்ததுஏன்தோழி


    இப்பாடலின் கடைசி இரண்டு அடிகளை இன்னும் ஈரமாக

    தேக்கி வைத்துள்ள இதயம் இசைஞானி இளையராஜா.. அவர்கள்.

    இளமையெல்லாம் வெறும்கனவுமயம்
    இதில்மறைந்ததுசிலகாலம்
    தெளிவும்அறியாமல்முடிவும்தெரியாமல்
    மயங்குதுஎதிர்காலம்


    எந்த மேடையிலும் இந்த வரிகளைப் பாடிக் காட்டாமல் அந்தப்

    பாட்டுக்குயில் இறங்கிப் போனதில்லை..

    திசைகளைத் தீர்மானம் செய்ய முடியாத வயதில்.. அந்த
    இசை ராஜனின் இதயத்தில் பதிவான வரிகளில்தான் எத்தனை

    எத்தனை அர்த்தங்கள்?
    எக்காலத்திற்கும் பொருந்துகிற வண்ணம் எழுதித்தந்தவனே..

    கண்ணதாசனே.. உன் கரங்களுக்கு எங்களின் இனிய முத்தங்கள்!

    மாலைப்பொழுதின்மயக்கத்திலே...

    மாலைப் பொழுதின்மயக்கத்திலே
    நான் கனவுகண்டேன்தோழி (மாலைப்பொழுதின்)
    மனதில் இருந்தும்வார்த்தைகள்இல்லை
    காரணம் ஏன்தோழி(2)
    ஆஆஆஆஆ(மாலைப்பொழுதின்)
    இன்பம் சிலநாள்துன்பம்சிலநாள்
    என்றவர் யார்தோழி
    இன்பம் கனவில்துன்பம்எதிரில்
    காண்பது ஏன்தோழி(2)
    ஆஆஆஆஆ(மாலைப்பொழுதின்)
    மணம் முடித்தவர்போல்அருகினிலே-ஓர்
    வடிவு கண்டேன்தோழி
    மங்கை என்கையில்குங்குமம்தந்தார்
    மாலையிட்டார் தோழி
    வழி மறந்தேனோவந்தவர்நெஞ்சில்
    சாய்ந்து விட்டேன்தோழி
    அவர் மறவேன்மறவேன்என்றார்உடனே
    மறந்து விட்டார்தோழி
    மறந்து விட்டார்தோழிஆஆஆஆஆ
    மாலைப் பொழுதின்மயக்கத்திலே
    நான் கனவுகண்டேன்தோழி
    கனவில் வந்தவர்யாரெனக்கேட்டேன்
    கணவர் என்றார்தோழி
    கணவர் என்றால் - அவர்
    கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன்தோழி
    இளமையெல்லாம் வெறும்கனவுமயம்
    இதில் மறைந்ததுசிலகாலம்
    தெளிவும் அறியாமல்முடிவும்தெரியாமல்
    மயங்குது எதிர்காலம்
    மயங்குது எதிர்காலம்ஆஆஆஆஆ
    மாலைப் பொழுதின்மயக்கத்திலே
    நான் கனவுகண்டேன்தோழி
    மனதில் இருந்தும்வார்த்தைகள்இல்லை
    காரணம் ஏன்தோழி
    காரணம் ஏன்தோழி
    ஆஆஆஆஆ
    மாலைப் பொழுதின்மயக்கத்திலே
    நான் கனவுகண்டேன்தோழி
    *****************-

    VEEGOPALJI

    (COURTESY:)

    என்றும் அன்புடன்,
    கண்ணன் சேகருடன் இணைந்து
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது - ருவைஸ், அபுதாபி..
    00971 50 2519693
    [email protected]

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters