Malarcholai Mangai Dr L Kailasam
  • Dear Friends,
    Vanathi Pathippakam have relesed my new historical novel Malarcholai Mangai.
    This new novel is written based on the various historical incidences. occurued before the ponniyinselvan novel
    I hope this new novel will definitely liked by all.
    I request all of you to get read the novel and inform your valuble views to me
  • அன்புள்ள நண்பர்களே

    இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்ததும் எவ்வளவு மகிழ்வு வருமோ அந்த மகிழ்வு இன்று எனக்கு கிடைத்தது. அது ஒன்றுமில்லை என்னுடைய முதல் சரித்திர புதினம் வானதி பதிப்பகத்தாரால் இன்று வெளியிடப்பட்டு இன்று அனைவருக்கும் கிடைத்த நாள்.

    பிரசவம் பார்த்த மருத்துவரான வானதி ராமு மிகுந்த கவனத்துடன் பல சிக்கல்களையும் சமாளித்து குறைந்த கால அவகாசத்தில் மலர்ச்சோலை மங்கை புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்று பல விதத்திலும் உதவினார். அவரின் அன்புக்கு நான் என்றும் அடிமை.

    இந்த சரித்திர புதையலை எனக்கு காண்பித்துக் கொடுத்த அனுஷாவுக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். புத்தகம் வந்த வேளையில் தானே தனது நண்பர்களுடன்/ அன்பர்களுடன் வந்து மங்கையின் அழகை அனைவருக்கும் காண்பித்து மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார்.

    அவருடன் வந்த முருகானந்தம் எனக்கு கொடுத்த ஆதரவை நான் மறக்கவே முடியாது. சதிஷ் தம்பி இந்த அருமையான நேரத்தில் சரியான நேரத்துக்கு வந்து கலந்து கொண்டு சிறபித்தார்.

    சரித்திர ஆர்வலாரான சுந்தர் கிருஷ்ணன் இன்று வேகமாக வந்தார். வந்ததும் மட்டும் அல்லாமல் எனக்கும் விஷ்வக் சேனன் எழுதிய ஐந்து சரித்திர புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அவரின் அன்பை நான் மறக்கவே முடியாது. மலர்ச்சோலை மங்கையையும் வாக்கினார்.

    ரவியும், ராமன் சங்கரனும், சேதுராமனும் கலந்து கொண்டு அனைவரையும் மிக மிக மகிழ்வித்தனர். அவர்களின் அன்புக்கு ஈடு ஏது?

    இந்த அருமையான வேளையில் சரித்திர கதை பிதாமகனார் விக்கரமனை சந்தித்து நான் பெற்ற ஆற்றலை தங்களுடன் பகிர்வு கொள்ள விரும்புகிறேன்.

    தங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்று நன்றி

    என்றும் தங்கள் அன்புள்ள
    டாடர் எல். கைலாசம்
  • I read the first 3 chapters of the book and the story is moving in a rapid tempo.
  • Thank you dear for your excellent comments

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters