THANJAI PERIYA KOIL - KAVITHAI- [1 Attachment]
  • அரவிந்தன் அவர்களே,

    தங்களின் கவிதை மிக அருமையாக உள்ளது. ஒரு செயல் சிறப்பாக செய்ய என்ன என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் ராஜராஜன்செய்ததினால்தான் இன்று நாம் ராஜஜேஸ்வரபெருவுடையாரை நாம் கண்டு களிக்க முடிகிறது.

    எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது , என்பன பற்றி முன்பே திட்டமிடுதல் அவசியமல்லாவா?

    ராஜராஜன்ஆலயம் கட்டதிட்டமிட்டதைதாங்கள்
    மனதுள்உருவெடுத்துமலர்ந்ததோர் பெருலிங்கம்
    என்றுமிக அழகாக குறிப்பிடுகிறீர்கள்.


    திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் உதாரணமாக நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள் போன்றவைகளைத்திரட்டுதல் அடுத்ததாக செய்ய வேண்டியது அல்லவா? அதை ராஜராஜன் எவ்விதம் செய்தான் என்பதை

    சிற்பிகள் உதவியோடு தரமான
    கல்லென்று தரம் பிரித்து ஆராய்ந்து
    செய்தான் என்றும்

    தொலைதூரம்கொண்டுவர
    தடம் போட்டு பாதை செய்து
    பெருங்கற்கள்பலகொண்டு தஞ்சையில்
    குவித்து வைத்தான்
    என்றும் சொல்கிறீர்கள்.

    நிர்வாகத்திறன் உள்ளவன் ஒவ்வொரு காரியத்திலும் தானே ஈடுபட வேண்டும் என்பதை

    கல்லெடுக்க மலையொன்றை தானேப்போய்
    கண்டுவந்து
    என்று அழகாக சொல்கிறீர்கள்.


    சிற்பிகள் வேலை செய்ய ஆணையிட்டது மட்டும் அன்றி தானும் உழைத்திட்டான் என்பதை

    சிற்பிகள் மட்டுமன்றி
    அரசனும் உழைத்திட்டான்
    என்கிறீர்.

    ஆணையிடுவது மட்டும்தான் மேலான்மை இயலில் சொல்லப்பட்டு இருக்கிறது அரசனும் உழைத்திட்டான் என்பது புதிய சிந்தனை. நாம் மேலும் சிந்திக்க வேண்டியது. நிர்வகிப்பவனும் உழைத்தால் செயல் மேலும் சிறப்புறும் போல.

    ஒருங்கிணைப்பு என்பது எந்த செயலுக்கும் மிகவும் முக்கியம். எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவை ராஜராஜன் செய்ததை, தாங்கள்

    பெருந்தச்சன்
    விரலசைக்க உளிகள் உறவாட
    சிற்பங்கள் உயிரோட.. பெருவுடையார்கோயிலது
    பேரழகுகொண்டு நிற்க
    என்கிறீர்

    கட்டுப்படுத்துதல் என்பது மிகவும் முக்கிய செயலாகும். திட்டமிட்ட பணிகளை மட்டும் அல்லாமல் நிதியை ஒழுங்குபடுத்துவது மிக முக்கியமான செயலாகும். அதை ராஜராஜன் செய்தான் என்பதை
    தன் பெயரை மட்டுமன்றி
    நன்கொடைகள் தந்தவரும், கோயிலுக்காய்
    உழைத்தவரும், சிற்பிகள் மொத்த பெயரும் 
    கல்லில்செதுக்கிவைத்து
    என்று அழகாக எழுதி உள்ளீர்.

    மனிதன் என்ன சிந்தித்தாலும், தெய்வத்தின் அனுகிரகம் இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை

    இதுநானாகட்டியது?பெருந்தச்சனாகட்டியது?
    இல்லையில்லை..எம்பெருவுடையார்
    தனக்குத் தானேகட்டியது
    அவனில்லாதுபோயிருப்பின் 
    எவனிதனை செய்யஒக்கும்
    என்று குறீப்பிடுகிறீர்கள்.

    ஆக நாம் இன்று லட்சம் பல கொடுத்து கற்கும் மேலான்மை கல்வியின் மொத்த ரகசியமும்ஹென்றி பயோலின்தத்துவங்களான திட்டமிடல், ஒழுங்கமைத்தல், ஆணையிடல், ஒருங்கினைத்தல், கட்டுபடுத்துதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் ராஜராஜன் செய்தது மட்டும் அல்லாமல் தெய்வத்தின் அருளும் நாம் செய்யும் காரியத்துக்கு வேண்டும் என்பதையும் உணர்ந்து ராஜராஜன் செய்ததால் தான் நாம்
    இன்றும் பெருவுடையாரை தரிசிக்க முடிகிறது.
    வாழ்க ராஜராஜன் புகழ்.


    அன்புள்ள
    டாக்டர் எல். கைலாசம்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters